கொலை த்ரில்லர் நாவல் படிக்க பிடிக்குமா? ‘இந்த’ 7 நாவல்களை மிஸ் பண்ணிடாதீங்க!
காதல் கதை புத்தகங்களை தேடி தேடி படிப்பவர்கள் ஒருவகை என்றால், கொலை த்ரில்லர், கொலையை கண்டுபிடிக்கும் கதை என்பது போன்ற வகை கதைகளை தேடி படிப்பவர்கள் இன்னொரு வகை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஜெட் வேகத்தில் செல்லும் கதை, படிப்பவர்களையும் தன்னுடன் அதே வேகத்தில் இழுத்து செல்லும் என்பது, இது போன்ற கதைகளை வாசிப்பவர்களுக்கு தெரியும். அந்த வகையில், பலரை வாய்பிளக்க வைக்கும் ட்விஸ்ட் உள்ள கொலை-த்ரில்லர் நாவல்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
பிக் லிட்டில் லைஸ் (Big Little Lies) புத்தகத்தை லையன் மொரைடி என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவல், 2014ஆம் ஆண்டு வெளியானது. வெவ்வேறு வகை வாழ்க்கையை பின்னணியாக கொண்ட மூன்று பெண்கள் ஒரு சம்பவத்தில் சிக்கி கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டார்களா இல்லையா என்பதையே விவரிக்கிரது இந்த புத்தகம்.
இன் தி வுட்ஸ் (In The Woods) புத்தகத்தை டானா ஃப்ரென்ஞ் என்பவர் எழுதியுள்ளார். இரண்டு துப்பறிவாளர்கள், 12 வயது குழந்தை கொல்லப்பட்டது என்று கண்டுபிடிக்கும் நாவல்தான் இது.
தி டா வின்ஸி கோட் (The Da Vinci Code) புத்தகத்தை டேன் பிரவுன் எழுதியுள்ளார். இந்த புத்தகம் 2003ஆம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகத்தை முடிக்கும் வரை வாசகர்களுக்கு தூக்கமே வராது. அந்த அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டது, இப்புத்தகம்.
தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் (The Girl On The Train) புத்தகத்தை பாலா ஹாக்கின்ஸ் எழுதியுள்ளார். தினமும் ரயிலில் பயணிக்கும் ஒரு பெண், தனது ரயில் செல்லும் வழியே பார்க்கும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறாள். கொலை செய்ததது யார் என்றும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். இதுவே தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் புத்தகத்தின் கதை.
தி வுமன் இன் வைட் (The Woman in White) புத்தகத்தை வில்கி காலின்ஸ் எழுதியுள்ளார். இந்த நாவல், 1860ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. ஓவியர் ஒருவர், வெள்ளை உடை அணிந்த ஒரு மர்மமான பெண்ணை இரவு நேரத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார். அவள் யார்? என்பதை வைத்து பயணிக்கிறது இந்த புத்தகத்தின் கதை.
கான் கேர்ள் (Gone Girl) புத்தகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜில்லியன் ஃப்லின் எழுதியுள்ளார். இந்த புத்தகம் 2012ஆம் ஆண்டில் வெளியானது. காணமல் போகும் ஒரு பெண் குறித்தும், அவளது கணவன் குறித்தும் எழுதப்பட்டுள்ள கதை இது.
தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் (The Silence Of The Lambs) புத்தகத்தை தாமஸ் ஹாரிஸ் எழுதியுள்ளார். இந்த புத்தகம் 1988ஆம் ஆண்டு வெளியானது. சீரியல் கில்லர் எனப்படும் தொடர் கொலையாளிகள் குறித்தும் அதில் முக்கியமானவராக அறியப்படும் ஹானிபல் லெக்டர் குறித்தும் இந்த நாவலில் எழுதியுள்ளனர்.