வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!
Meditations புத்தகத்தை, மார்க்கஸ் எழுதியிருக்கிறார். வாழ்வில் பொறுமை, அறிவு ஆகியவற்றை பெறுவதற்கு என்ன வழி என்பதை காண்பிக்கிறது இந்த புத்தகம்.
The Alchemist புத்தகம், கனவுகளை துரத்துவதற்கு, வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கு உதவும் புத்தகங்கள் ஆகும். இது, வாழ்வில் தெளிவை பெறுவதற்கும் உதவும்.
Think Like a Monk புத்தகத்தை ஜே ஷெட்டி எழுதியிருக்கிறார். தற்போதைய பரபரப்பான உலகில், அமைதியையும் நிம்மதியும் பெறுவது எப்படி என்பதற்கான வழியை இந்த புத்தகம் காண்பிக்கும் வகையில் இருக்கிறது.
The Subtle Art of Not Giving a F*ck புத்தகத்தை மார்க் மேன்சன் எழுதியிருக்கிறார். வாழ்வில் நாம் தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்போம். அதை செய்யாமல் எப்படி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது என வழிக்காட்டுகிறது, இந்த புத்தகம்.
Deep Work புத்தகத்தை, கால் நியூபோர்ட் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒருவர் வாழ்வில் முன்னேற என்னென்ன் செய்ய வேண்டும், படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி என்று காண்பிக்கிறது.
How to Win Friends and Influence People புத்தகத்தை டேல் கார்னீஜ் எழுதியிருக்கிறார். இது, ஒரு உறவில் ஏற்படும் சண்டைகளை தீர்த்து எப்படி இணக்கமாக வாழ்வது என்பதை காண்பிக்கிறது.
The Seven Habits of Highly Effective People புத்தகத்தை ஸ்டீஃபன் ஆர்.கவி எழுதியிருக்கிறார். இது, வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்படி ஒருவர் முன்னேற வேண்டும் என்பதை காண்பிக்கிறது.