திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? ‘இந்த’ புத்தகங்களை படிங்க..

Mon, 04 Mar 2024-2:19 pm,

இந்தியாவில் திருமண பந்தங்களை, மிகவும் புனிதமான உறவாக பலர் பார்க்கின்றனர். இந்த உறவில் இணைந்தவர்கள், ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் ஒத்துப்போகவில்லை என்றாலும், அந்த உறவை நீட்டிக்க வைக்க, பல முயற்சிகளை மேற்கொள்வர். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க டிப்ஸ் கொடுக்கும் சில புத்தகங்கள்..இதோ. 

தி செவன் பிரின்சிபல்ஸ் ஃபார் மேகிங் மேரேஜ் வர்க் (The Seven Principles For Making Marriage Work) புத்தகத்தை நேன் சில்வர் மற்றும் ஜான் எம்.காட்மேன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் திருமணத்தில் எழும் சண்டை சச்சரவுகளை எப்படி சுமூகமாக தீர்ப்பது எப்படி, என்று அதில் டிப்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், தம்பதிகளுக்குள் எப்படி நெருக்கத்தை அதிகரிப்பது என்றும் இதில் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

தி மீனிங் ஆஃப் மேரேஜ் (The Meaning Of Marriage)புத்தகத்தை கேத்தி கெல்லர் மற்றும் டிமோத்தி கெல்லர் என்பவர்கள் எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தை திருமணம் செய்து அதிக வருடங்கள் ஆனவர்கள் முதல், புதிதாக திருமணம் செய்தவர்கள் வரை அனைவரும் படிக்கலாம். இதில், திருமணம் என்றால் என்ன? இந்த உறவின் பலன் என்ன என்று பல கேள்விகளுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. 

ஹவ் வி லவ் (How We Love) என்ற புத்தகத்தை மிலன் அண்ட் கே ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தில் திருமண உறவில் இருப்பவர்களிடம் எந்த மாதிரியான இணக்கம் இருக்க வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. இதைப்படித்தால், திருமண உறவு இன்னும் வலுபடும் என வாசகர்கள் தெரிவிக்கின்றனர். 

தி எமோஷனலி டிஸ்ட்ரக்டிவ் மேரேஜ் (The Emotionally Destructive Marriage) புத்தகத்தை லெஸ்லி வெர்நிக் எழுதியுள்ளார். இதனை, உணர்வு ரீதியாக திருமண உணர்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள், இனி முன்னேறி செல்வது எப்படி என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் பல பெண்கள் பயனடைந்ததாக கூகுள் விமர்சனத்தில் தெரிவித்திருந்தனர். 

நெகோஷியேட்டிங் தி நான்நெகோஷியபல் (Negotiating the Nonnegotiable) புத்தகத்தை டேனியல் ஷாபிரோ என்பவர் எழுதியுள்ளார். இதில், திருமண உறவில் இருப்பவர்கள் சண்டையிட்டால் எப்படி அதை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், சண்டை ஏற்படாமல் எப்படி இணக்கத்தை உருவாக்குவது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தி நியூ ரூல்ஸ் ஆஃப் மேரேஜ் (The New Rules Of Marriage) புத்தகத்தை டெர்ரென்ஸ் ரியல் என்பவர் எழுதியுள்ளார். இதில், பென்ணிற்கும் ஆணிற்கும் ஒரு திருமண உறவில் என்ன வேலை, அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது குறித்து கூறப்பட்டிருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link