அரசியல் அலசும் பொலிட்டிக்கள் த்ரில்லர் படங்கள்! எந்த ஓடிடியில் எப்படி பார்ப்பது?
எமன்:
விஜய் ஆண்டனி நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் எமன். இதனை ஜீவா ஷங்கர் இயக்கியிருந்தார். வெளியான போது நல்ல வரவேற்பினை பெற்றிருந்த இந்த படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
மாநாடு:
2021ஆம் ஆண்டு வெளியான டைம்-ட்ராவல் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.
மாமன்னன்:
கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று, மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
கோ:
2011 வெளியான கோ திரைப்படம், கே.வி.ஆனந்தின் சிறப்பான படைப்புகளுள் ஒன்று. இதில் ஜீவா, கிருத்திகா, பியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்களில் பார்க்கலாம்.
இந்தியன்:
1996ஆம் ஆண்டு வெளியான படம், இந்தியன். ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருவதற்குள், இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்த்துவிடுங்கள்.
உரியடி:
விஜயகுமார் இயக்கி-நடித்திருந்த படம், உரியடி. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
முதல்வன்:
இப்போது இளைஞர்களாக இருக்கும் பலருக்கு குழந்தை பருவ நினைவாக இருக்கும் திரைப்படங்களுள் ஒன்று, முதல்வன். இந்த படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். இதனை யூடியூப் தளத்தில் இலவசமாகவே பார்கலாம்.
காப்பான்:
சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருந்த படம், காப்பான். இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.