SIP+ SWP: கவலை வேண்டாம்... வாழ்நாள் முழுவதும் மாதம் தோறும் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்

Thu, 30 Jan 2025-8:11 pm,
FD

முதலீட்டிற்கு FD திட்டங்கள் சிறந்தவை தான். இதற்குக் காரணம், 6 முதல் 9 சதவீதம் வரை நிலையான வருமானம் தருவதாகும். இருப்பினும், இந்த வருமானம் வங்கியைப் பொறுத்தது. வங்கிகள் இந்த வட்டியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், ஓரளவிற்கு தான் வருமானம் கிடைக்கும்.

எஃப்டியில் முதலீடு செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே ரூ.1 லட்சம் வருமானம் பெற முடியாது. இதற்கு நீங்கள் வருமானத்தை அள்ளித் தரும் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

one lakh

திட்டமிட்டு சேமித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து கோண்டே ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 சில ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 

நல்ல வருமானம் ஈட்ட நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். 

பரஸ்பர நிதிய முதலீட்டில், சராசரியாக 15 சதவீத வருடாந்திர வருமானம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், இந்த தொகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.27 கோடியாக அதிகரிக்கும். இதில், ரூ.36 லட்சம் உங்கள் முதலீடாகவும், மீதமுள்ள சுமார் ரூ.2 கோடி தொகை வட்டியாகவும் இருக்கும்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.27 கோடியில் ரூ.2 கோடியை SWP திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். SIP என்பது ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்வதாகும். SWP என்பது ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுப்பதைக் குறிக்கிறது. 

 

SWP திட்டத்திலும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் ஆண்டுதோறும் 9 சதவீத வட்டி கொடுத்தாலும் கூட, 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்தை எடுக்க முடியும். இதற்குப் பிறகும் கூட உங்கள் முதலீட்டில் கிடைக்கும் வருமானம் காரணமாக உங்கள் கணக்கில் ரூ.9.52 கோடி இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link