மருத்துவ காப்பீடு: 24 மணி நேர ஹாஸ்பிடலைசேஷன் அவசியமா..!!!

Sat, 12 Sep 2020-12:09 am,

இது சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மை. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. தற்போது, காப்பீட்டு நிறுவனங்கள் சில காப்பீட்டு திட்டங்களில் மகப்பேறுக்கான காப்பீட்டையும் வழங்குகின்றன. இருப்பினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை முழுமையாக அறிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்ற வகையிலான மகப்பேறுக்கான காப்பீடு எடுத்துக் கொள்ளவது நல்லது. மேலும், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாக புரிந்து கொள்ளவும்.

24 மணிநேர ஹாஸ்பிலஷேஷன் தேவைப்படாத, சில சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும். இந்த வகையில் பல் சிகிச்சைகள், கண்புரை, குடலிறக்க அறுவை சிகிச்சை, தசைநாரகளுக்கான சிகிச்சை மற்றும் மாதவிடாய் பிரச்சனை தொடர்பான அறுவை சிகிச்சை, மூட்டு மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் பல சிகிச்சைகள் அடங்கும்.  உங்கள் பாலிஸியில் எந்த வகை சிகிச்சைகளுக்கு கிடைக்கும் என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும்.

உங்களுக்கு மருத்துவ ரீதியாக அவசரநிலை ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் காப்பீட்டு நிறுவனம் உங்கள் மருத்துவ கட்டணங்களை ஏற்றுக் கொள்வதை மருத்துவ காப்பீடு உறுதி செய்கிறது. வரி சலுகை என்பது நீங்கள் பெறும் கூடுதல் நன்மை. அதனால் வரிசலுகைக்காக பாலிஸி எடுக்காமல் உஙக்ள் தேவைகளுக்கு ஏற்ப முழுமையான பாலிஸியை எடுக்க வேண்டும்.

ஆரோக்கியமாக இருந்தால் காப்பீடு தேவையில்லை என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், நோய்கள் சொல்லிக் கொண்டு அனுமதி கேட்டுக் கொண்டு வருவதில்லை. அதனால் திடீரென நோய் வாய்ப்பட்டால், அல்லது துரதிஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்பட்டால் சமாளிக்க அனைவரும் மருத்துவ காப்பீடு வைத்திருப்பது நல்லது.

கார்ப்பரேட் பாலிஸி திட்டங்கள் நன்மை பயக்கும். ஆனால் வயதான பெற்றோர் மற்றும் சார்திருப்பவர்கள் இருக்கும் போது இந்த திட்டம் முழுமையாக பாதுகாப்பு வழங்காது.  மேலும், நீங்கள் வேலையை விட்டு வெளியேறி விட்டால் பாலிஸி செல்லாது. எனவே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டு பாலிஸி அவசியம். ஏனெனில் இது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link