சக்தியைக் கொண்டாடும் நவராத்திரி வந்தாச்சு! கோலகலமாய் கொலுப்படிகளை அமைக்க ஏற்ற நேரம்?
நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தியை எப்படி வழிபட வேண்டும்? நைவேத்தியம் என்ன செய்யலாம்?
நவராத்திரியில் முதல் மரியாதை அன்னை சைலபுத்திரிக்கு உரியது. ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி, ரிஷப வாகனத்தில் காட்சி தருவார் அன்னை சைலபுத்திரி
அன்னைக்கு முதல் நாளில் மங்களகரமான மஞ்சள் நிறத்தால் ஆன பொருட்களை படைத்து வழிபட வேண்டும்.
மஞ்சள் நிற ஆடையை உடுத்துவதும், அன்னைக்கு அலங்காரம் செய்வதற்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவதும் நல்லது. அதேபோல, எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற கேசரி நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
நவராத்திரியின் முதல் நாளில் அன்னையை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், தேவி மகாத்மியம், லலிதா திரிசதி, ஷ்யாமள தண்டகம் என அன்னைக்கு உகந்த மந்திரங்களை படித்து பாராயணம் செய்யலாம்