Nayanthara-Vignesh Sivan: நூறாண்டு காலம் உன்னோடு தான்... நயன்-விக்கி வைரல் Pics
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ஃபிக்ஸ் அறிவித்துள்ளது. இதற்கு முன், நயன் மற்றும் விக்கி இருவரும் இணைந்து படங்களை பகிர்ந்துள்ளனர்.
ரவுடி பிக்சர்ஸ் பேனரில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை படமாக்கும் பொறுப்பை இயக்குனர் கௌதம் மேனன் கவனித்து வருகிறார்.
நயன்-விக்கி திருமண வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து நெட்ஃபிக்ஸ் விலகிவிட்டதாக செய்தி பரவியதை அடுத்து, இருவரின் படங்களைப் பகிர்ந்து கொண்டு நெட்ஃபிக்ஸ் அறிவிப்பு வெளிவந்தது.
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஏழு வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். 'நானும் ரவுடி தான்' தான் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். படத்தின் தயாரிப்பாளராகவும் நயன்தாரா இருந்தார்.