சமந்தா நடிக்க நயன்தாரா தான் காரணமாம்

Wed, 27 Apr 2022-7:55 pm,

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதையை சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்துவிட்டாராம் விக்னேஷ் சிவன்

அதற்கு சரியான நேரம் அமையாததால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததாம். நயன்தாரா ஓகே சொன்ன பிறகே படத்தை இப்போது எடுக்க முடிவெடுத்துள்ளார்

இன்னொரு ஹீரோயின் யாரை தேர்வு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது அதற்கும் நயன்தாராவே ஐடியா கொடுத்துள்ளார்

சமந்தாவுடன் பேசி, இக்கதையில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தாராம். விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபுல் ரொமான்ஸில் வெளியாகும் காதல் படம் என்பதால், ரசிகர்களும் பெரும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link