வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்...
நடிகை நயன்தாராவுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் நட்சத்திர காதலர்களாக வலம் வருகின்றனர். காதலர்கள் எப்போது தம்பதிகளாவார்கள் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் குடும்பத்தினருடன் இணைந்து ஓணம் கொண்டாடியுள்ளனர்.
நயன்தாரா கேரளாவின் கலாச்சாரப்படி சந்தன கலரில் பட்டுப் புடவை அணிந்திருக்க, விக்னேஷ் சிவனும் பட்டு வேட்டி, சட்டை அணிந்துள்ளார்.