வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க
குறைந்த கொழுப்புள்ள உணவுகள் எடையைக் குறைக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், குறைந்த கொழுப்பு என்று பெயரிடப்பட்ட உணவுகளில் இருந்து கொழுப்பை அகற்றும் போது, அவற்றில் இழக்கப்பட்ட சுவையை ஈடுசெய்ய சுகர் அடிடிவ்ஸ் சேர்க்கப்படுவதாக ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக மீண்டும் எடை அதிகரிப்பதோடு பல வித பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆகையால் எடை இழப்பு பயணத்தில் இயற்கையான வழிகளை பின்பற்றுவதே சிறந்தது.
உணவை வேகமாக உண்பது: உணவை மெதுவாக மெல்லுவது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நடந்து கொண்டோ, டி.வி பார்த்த்துக்கொண்டோ உணவை உட்கொண்டால், நம் வயிறு நிரம்பியதா இல்லையா என்பதை அறிய முடியாமல் போகிறது. அவசர அவசரமாகச் சாப்பிடுவதால், செரிமானமும் பாதிக்கப்படலாம். ஆகையால், அமைதியாக உட்கார்ந்து சரியாக மென்று சாப்பிடுவது உடல் எடையை பராமரிக்க உதவும்.
உணவில் நார்ச்சத்து இல்லாமை: நார்ச்சத்து குறைந்த கலோரி சத்து. ஒரு கிராம் நார்ச்சத்தில் 3 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதேசமயம் கொழுப்பில் ஒரு கிராம் 9 கலோரிகள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணிக்க நேரம் எடுக்கும், இதன் காரணமாக நாம் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கிறோம். இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
சிலர் மிக குறைந்த அளவிலேயே தண்ணீரை குடிக்கிறார்கள். இது உடல் எடை அதிகரிக்க ஒரு காரணமாகின்றது. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால், ஆக்ஸிஜன் ஓட்டம் சீராக இருப்பதுடன் உடலின் ஆற்றல் நிலையும் மேம்படும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவ்வப்போது பசி எடுக்கும் உணர்வையும் குறைக்கிறது. இதனால் கூடுதல் கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள்: ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், கார்டிசோல், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் பசி ஹார்மோன்கள் நம் எடையை பெரிதும் பாதிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் நம் உடலின் கொழுப்பை உற்பத்தி செய்வதிலும், மன அழுத்தம், பசி ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உணவில் இருந்து கலோரிகளை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. இந்த ஹார்மோன்கள் சரியாக வேலை செய்ய, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
தூக்கமின்மை உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. சரியான தூக்கம் இல்லையென்றால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகின்றது. சீரான தூக்கம் கார்டிசோலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இரவில் சீகிரம் தூங்குவதும், போதுமான அளவு தூங்குவதும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது. மன அழுத்தம் ஏற்பட்டால், அதன் காரணமாக பொதுவாக பசியும் அதிகரிக்கின்றது. இது தவிர, இதனால் கார்டிசோல் ஹார்மோன் அடிவயிற்றில் கொழுப்பு திரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஸ்ட்ரெஸ் பெல்லி என்றும் அழைக்கப்படுகிறது. ஆகையால் உடல் எடையை குறைத்து தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க கண்டிப்பாக மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றின் மூலம் இதை செய்யலாம்.
போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். இதனால் கலோரிகள் எரியாமல் எடை அதிகரிக்கும். ஆகையால் கண்டிப்பாக தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.