உடற்பயிற்சிக்கு பின் இதை மட்டும் செய்யாதீங்க: செய்தால் அவதிதான்
கடினமான பணிகளை செய்த பிறகு, உங்கள் உடல் வெப்பமடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, அது திடீரென்று உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது. இது உங்கள் வொர்க்அவுட்டின் கடின உழைப்பைக் கெடுக்கும். இதனுடன், உங்கள் உடலால் அடுத்தடுத்து குளிர் சூடு என மாறுபட்ட தன்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.
உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பதன் விளைவு இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சியின் போது, உங்கள் நரம்புகளில் விரைவான இரத்த ஓட்டம் இருக்கும்.
உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடித்தால், தலைவலியும் ஏற்படக்கூடும். சைனஸ் நோயாளிகள் குளிர்ந்த நீரை அருந்தவே கூடாது. ஏனெனில் இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கலாம்.
இந்த பழக்கத்தால் உங்கள் செரிமானமும் பாதிக்கப்படலாம். கடுமையான வொர்க்அவுட்டிற்குப் பிறகு திடீரென குளிர்ந்த நீரைக் குடிப்பதால், உங்கள் உடலில் குளிர்-சூடு இரண்டும் கலந்த நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நீங்கள் வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)