பூரட்டாதியில் சனி பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் பிரச்சனைகளில் இருந்து விடுதலை
Saturn Transit: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனி பகவான். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் சஞ்சரிப்பார், எனினும் இந்த கால கட்டத்தில் அவர் அதில் அடங்கியுள்ள நட்சத்திரங்களிலும் பிரவேசிப்பார். சனியின் ராசி பெயர்ச்சியுடன், சனியின் நட்சத்திர பெயர்ச்சியும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பெயர்ச்சி 2025: சனி பகவான், 2025 புத்தாண்டில் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சனி பெயர்ச்சி 2025, மார்ச் 29, தேதி அன்று நடக்கும். ஆனால் அதற்கு முன்னதாக, 2024ம் ஆண்டின் இறுதியில் சனி தனது நடசத்திரத்தை மாற்றிக் கொள்கிறார். இதனால் சிலர் தனது வாழ்க்கையில் சந்தித்து வந்த இன்னல்கள் அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறக்கும் எனலாம்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை, சனீஸ்வரர், பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். தற்போது சனி பகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்து வரும் நிலையில்க் சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சி காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
துலாம்: சனி நட்சத்திரபெயர்ச்சி துலாம் ராசிகளுக்கு நற்பலன்களைக் கொடுக்கும். சனி தனது உச்சநிலையால் மிகவும் சக்திவாய்ந்தவராகி சிறந்த பலனைத் தருகிறார். பொருள் வசதிகள் பெருகும். இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். பொருளாதார வளங்களை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையப்படும். கடினமாக உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். மனதில் நிம்மதி நிறைந்திருக்கும்.
தனுசு: சனிபகவானின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றமான காலமாகும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடன் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். நிதி ஆதாயம் நிதி நிலைமையை மேம்படுத்தும். ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்: சனி பகவான் மகர ராசிக்கு அதிபதி. இந்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியினால், இது நாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மது உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில், தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விடுதலை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
கும்பம்: சனிதேவரின் ராசியான, கும்ப ராயினருக்கு சனியில் நட்சத்திர பெயர்ச்சியினால், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் லாபம் இருக்கும். தடைகள், பிரச்சனைகள் தீரும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். வேலை இடம் மாற்றம் சாத்தியம். இது வருமானத்தை அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் கூடும். ஏற்கனவே செய்த முதலீடுகளின் பலன்கள் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.