Nivetha Pethuraj: புதிய சாதனை படைத்த நிவேதா பெத்துராஜ்! ரசிகர்கள் வாழ்த்து..
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக விளங்குபவர், நிவேதா பெத்துராஜ். இவர், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் படம், ‘ஒரு நாள் கூத்து’. இதில் அவர் காவ்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
நிவேதா பெத்துராஜ், தனது நடிப்பிற்காக சில மாநில விருதுகளையும் வென்றுள்ளார். நடிப்பிற்காக விருதை வென்றது மட்டுமன்றி தற்போது தனது இன்னொரு தனித்திறமைக்காக இன்னொரு கோப்பையையும் வென்றுள்ளார்.
நிவேதா பெத்துராஜ், தான் நடித்த படங்களில் தைரியமான கதாப்பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீராங்கனையாகவும், திமிரு பிடிச்சவன் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ், நடிகையாக மட்டுமன்றி விளையாட்டு வீராங்கனையாகவும் வலம் வருகிறார். இவர், பேட்மிண்டன் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு, அதில் தற்போது வெற்றி கண்டுள்ளார்.
மிக்ஸ்ட் டபுல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக நிவேதா பெத்துராஜ் விளையாடியுள்ளார். அது மட்டுமன்றி, இப்போட்டியில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.
கோப்பையுடன் எடுத்துள்ள புகைப்படங்களை நிவேதா வெளியிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.