NAFLD: கல்லீரல் நோய் பாதிப்பா? இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அமுதமாகும்!
கல்லீரல் வீக்கம் என்பது ஃபேட்டி லீவர் (Fatty Liver) என்று சொல்லப்படுகிறது. இது கொழுப்பு கல்லீரல் என்றும் அறியப்படுகிறது. இந்த பிரச்சனை, நமது மாறிவரும் வாழ்க்கை முறைகளால் ஏற்படும் பாதிப்பாகும்
ஊட்டச்சத்தின் தரத்தை மேம்படுத்தி, சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவது, உடல் எடையை பராமரிப்பது என பல்வேறு வாழ்க்கை முறை மாற்ற்ங்களால் கல்லீரல் வீக்கம் சரி செய்ய்லாம். இந்த நோயை போக்க, சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
கொட்டைகள் கல்லீரல் வீக்கத்தை குறைப்பதுடன், இன்சுலின் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. அக்ரூட் அல்லது வால்நட் சாப்பிட்டால், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது
கீரைவகைகள், கல்லீரலுக்கு மட்டுமல்ல, உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் உணவு. கீரை சாப்பிடுவது மதுசாரா கல்லீரல் வீக்கத்தின் அபாயத்தைக் குறைக்கும். இலைக் காய்கறிகளில் உள்ள நைட்ரேட் மற்றும் தனித்துவமான பாலிபினால்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அதிக அளவு குர்குமின் கொண்ட மஞ்சள் கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும். கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக அதிகமாக இருக்கும் இரண்டு என்சைம்களான அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (ALT) மற்றும் அஸ்பார்டேட் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (AST) அளவைக் குறைக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு
சால்மன், மத்தி, ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரல் கொழுப்பைக் குறைத்து, HDL கொழுப்பை அதிகரிக்கின்றன
வைட்டமின் ஈ அதிகமாக உள்ள சோயா, கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும்
அசாதாரணமான கல்லீரல் நொதிகளைக் குறைக்க காபி உதவுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அபாயத்தையும் காபி குடிப்பது குறைக்கும். ஆனால், அளவுடன் குடித்தால் தான் காபி ஆரோக்கியமானது, இல்லையென்றால் ஆபத்தானது தான்...
அனைத்து பச்சைக் காய்கறிகளும், இலைக் காய்கனிகளும் கல்லீரல் வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றன. இவை, கல்லீரல் பிரச்சனைகளை போக்குவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.