Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்

Sat, 27 Jul 2024-4:58 pm,

பல மாத கால மௌனத்திற்குப் பிறகு, மோடி அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி பேசியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதை நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. 

2004 ஆம் ஆண்டில் OPS-ஐ நிறுத்தி அதற்கு பதிலாக மத்திய அரசு NPS -ஐ கொண்டு வந்தது. புதிதாக வந்த தேசிய ஓய்வூதிய அமைப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்களை சிறந்த முறையில் பாதுகாக்குமா இல்லையா என்பது குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் ஏற்பட்டது. இரண்டு முறைகளிலும் ஓய்வூதிய தொகையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக கூறி ஊழியர்கள் புதிய முறையை மாற்ற கோரினர். 

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு OPS-ஐ மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "பரிசீலனையில் எந்த திட்டமும் இல்லை" என்று தெரிவித்தார்.

ஜூலை 23 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், NPS ஐ மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு தனது பணியில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூறினார். “மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பு ஆக்கபூர்வமான அணுகுமுறையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிதி விவேகத்தையும் பேணி தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் முடிவுகாணும் தீர்வு உருவாக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பணியை செய்ய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை பற்றிதான் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய 14 கோரிக்கைகளை, கூட்டு ஆலோசனை அமைப்புகளின் (ஜேசிஎம்) தேசிய கவுன்சில் (பணியாளர்கள் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா எழுப்பினார். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு உத்தரவாதமான ஓய்வூதிய அமைப்பு இருந்தது. ஆனால் தேசிய ஓய்வூதிய அமைப்பில் அடிப்படை ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பிடித்தம் செய்து, ஓய்வுபெறும் போது நிறுவனத்தின் பங்களிப்போடு சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த முறை தங்களுக்கு ஏற்றதல்ல என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வாதாடுகிறார்கள். 

பழைய ஓய்வூதியத் திட்டமான OPS இன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரியும் ஆண்டுகளில் அவர்களின் சம்பளத்திலிருந்து பங்களிக்க வேண்டியதில்லை. இப்படி இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள். ஆனால், தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் இந்த வசதி இல்லை. அவர்களும் இதில் பங்களிக்க வேண்டியுள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு தொடர்புடைய அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கபடுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link