பழைய ஓய்வூதியம்: மாநில அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட், மீண்டு ஓபிஎஸ், உத்தரவு வெளியானது!!

Sat, 25 Nov 2023-12:01 pm,

பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் உத்தரபிரதேச மாநில கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

கணக்காளர்களுக்குப் பிறகு, விரைவில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன் (Old Pension Scheme) கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து துறைகளும் இதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளன. 

 

இதற்காக, இடைநிலைக் கல்வி இயக்குனரகம், அனைத்து கோட்ட இணைக் கல்வி இயக்குநர்கள் மற்றும் துணைக் கல்வி இயக்குநர்களிடம் 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்களை கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், 2005, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், பணி நியமன விளம்பரம் வெளியான ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு (State Government Employees), பழைய ஓய்வூதிய பலன் விரைவில் வழங்கப்படும். அதற்கான ஆயத்தப்பணிகளை, துறை துவக்கியுள்ளது. இடைநிலைக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து, நவம்பர் 16ம் தேதிக்குள் விவரங்களை கேட்டிருந்தார். 

இதன் கீழ், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர், அவர்களின் நிறுவனத்தின் பெயர், விளம்பரம் செய்யப்பட்ட தேதி, சேர்ந்த தேதி மற்றும் முதல் சம்பளம் செலுத்திய தேதி போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, அடுத்த செயல்முறை தொடங்கும்.

இதன்படி, 2005 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த பணிக்கான நியமன விளம்பரம் இதற்கு முன் வெளியாகி இருந்தால், அத்தகைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பழைய ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள்.

ஏப்ரல் 1, 2005 -க்கு பின், மாநில அரசு பழைய ஓய்வூதியத்தை, ரத்து செய்து புதிய ஓய்வூதிய முறையை அமல்படுத்தியது. அதன் பின்னர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதன் பிறகு தற்போது ஏப்ரல் 1, 2005 க்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரம்  வெளிவந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link