இந்த நிற கார்களை இனி வாங்காதீங்க! பதிவு செய்ய முடியாது
காரணம் இதுதான்; "பச்சை என்பது ராணுவத்தைக் குறிக்கும். Defense வாகனங்களுக்கு மட்டும்தான் இந்தக் கலர் சொந்தம். அதனால் பொதுமக்கள் இதைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது" என்று தமிழக அரசு, மத்திய அரசின் Ministry of Road Transport and Highways (MoRTH)-ன் உதவியை நாடியிருக்கிறது.
1989, மத்திய மோட்டார் வாகனச் சட்டம் அதிகாரம் 121 (1)-ன் படி, பாதுகாப்புத் துறையைச் (Defense Department) சேர்ந்த வாகனங்கள் தவிர்த்து, வேறெந்த மோட்டார் வாகனமும் ஆலிவ் கிரீன் பெயின்ட் ஷேடில் இருக்கக் கூடாது என்றொரு சட்டம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருந்தபோதிலும், கார் உற்பத்தி நிறுவனங்கள் ஆலிவ் கிரீன் கலரில் வாகனங்களைத் தயாரித்து - அதற்கு Robust Emerald Pearl, Ranger Khaki, Pewter Olive என்று வெரைட்டியாகப் பெயர்கள் வைத்து விற்பனை செய்து வந்தன. இப்போதைக்கு ஆலிவ் கிரீன் கலரில் விற்பனையாகும் ஒரே வாகனம் - மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N மட்டும்தான்.
இந்த நிலையில்தான் திடீரென்று கடந்த இரண்டு மாதங்களாக, ஆலிவ் கிரீன் கலர் ஷேடில் உள்ள வாகனங்கள் பதிவு செய்யப்படப் போவதில்லை என்று மாநில அரசில் உள்ள சில ஆர்டிஓ அலுவலகங்கள் முடிவெடுத்ததாகத் தகவல். இது மட்டுமில்லை; உங்களிடம் ஆலிவ் கிரீன் கலர் வாகனம் இருந்தால், அதை சட்டப்படி கலரை மாற்றிவிட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்கப்படலாம்.
எதற்கும் ரெடியாக இருங்கள்! அப்படி மாற்றவில்லை என்றால், பெனால்ட்டிக்கும் ஆளாக நேரிடலாம். அதேநேரம், ஆலிவ் கிரீன் தவிர்த்து - இன்னொரு கலருக்கும் ஆப்பு இருக்கிறது. அது, சிவப்பு நிறம். இதை Postal Red கலர் என்கிறார்கள். காரணம் - ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவம் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்குத்தான் இந்த நிறம் சொந்தம் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. போஸ்டல் ரெட் கலர் வாகனம் இருந்தாலும், ரீபெயின்ட் பண்ண ரெடியாக இருங்கள்.
இப்படி சட்டப்படி உங்கள் கார் கலரை மாற்ற வேண்டும் என்றால், அதற்கென்று உள்ள Notice for Alterations in Motor Vehicles (NAMV) என்கிற ஒரு விண்ணப்பத்தை ஆன்லைனில் இருந்து டவுன்லோடு செய்து நிரப்ப வேண்டும். இது முறைப்படி உங்கள் சம்பந்தப்பட்ட RTO-வால் அங்கீகரிக்கப்பட்டு, Vahan Portal வலைதளத்திலும், வாகனத்தின் ஆர்சி புக்கிலும் அப்டேட்டும் செய்யப்பட வேண்டும்.
வாகனங்களைக் கலர் கலராக ரீ-மாடிஃபிகேஷன் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். Olive Green, Postal Red கலர் கொண்ட வாகன உரிமையாளர்களும் ரீ-பெயின்ட் பண்ண ரெடியாக இருங்கள்