நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் இரண்டு மடங்கு விலையில் விற்கும் கார்கள்

Fri, 13 May 2022-2:49 pm,

மாருதி ஸ்விஃப்ட் பாகிஸ்தானில் PKR 27.74 லட்சத்தின் அடிப்படை விலையில் விற்கப்படுகிறது, இது இந்திய மதிப்பில் 11.28 லட்ச ரூபாய்க்கு சமமானதாகும். இதற்கு மாறாக, இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் விலை ரூ.5.92 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானில் கிடைக்கும் கார்களின் விலை இந்திய சந்தையில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம்.

இந்தியாவில் மாருதி வேகன்ஆர் விலை ரூ.5.47 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானில் வேகன் ஆர் விலை PKR 20.84 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8.47 லட்சத்திற்கு சமம். பாகிஸ்தான் ஸ்பெசிஃபிக் வேகன் ஆர் முந்தைய தலைமுறையின் மாடலாகும், அதேசமயம் புதிய தலைமுறை வேகன்ஆர் இந்தியாவில் வந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

இந்தியாவில் மாருதி ஆல்ட்டோவின் விலை ரூ.4.08 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. பாகிஸ்தானில் ஆல்ட்டோ விலை PKR 14.75 லட்சத்தில் தொடங்குகிறது, இது இந்திய மதிப்பில் 6 லட்ச ரூபாய்க்கு சமமானதாகும். இது தவிர பாகிஸ்தானில் கிடைத்த ஆல்டோ மிகவும் பழமையான மாடல்.

இந்தியாவில் கியா சொனட் விலை ₹ 7.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டின் விலை நேபாளத்தில் NPR 36.90 லட்சம் ஆகும், இது தோராயமாக ரூ.23.10 லட்சத்திற்கு சமம்.

இந்தியாவில் Tata Safari விலை ரூ.15.25 லட்சம் முதல் ரூ.23.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. நேபாளத்தில் இந்த மூன்று வரிசை எஸ்யூவியின் விலை NPR 83.49 முதல் NPR 1 கோடி வரை உள்ளது. இதன் விலை தோராயமாக ரூ.62.53 லட்சம். அதாவது நேபாளத்தில் உள்ள டாடா சஃபாரியின் விலை இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link