பிளாஷ்பேக்! மைதானத்தில் கண்கலங்கிய தோனி
2019 ஆம் ஆண்டு இங்கிலாதில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற்றது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின
இந்திய அணி இந்த தொடரில் உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அரையிறுதியை கண்டுகளித்தனர்.
முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் விளையாடியதால், இந்திய அணி சேஸிங் செய்தது. முன்னணி வீரர்கள் அவுட்டாக, தோனி மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் அவர் திடீரென அவுட்டாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் உடைந்தது. தோனியும் கண்ணீருடன் களத்தில் இருந்து வெளியேறினார்.
2019 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இதேநாளில் இந்த மேட்ச் நடைபெற்றது. சுமார் 3 ஆண்டுகள் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்துள்ளனர்.