ஒரு கிலோ இனிப்பு 9000 ரூபாய்! இந்த மிட்டாயில் அப்படி என்ன சிறப்பு? தெரிந்து கொள்ளுங்கள்
மாவா (Mawa), சர்க்கரை, நெய் மற்றும் உலர்ந்த பழங்களை கலந்து இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தவகை இனிப்புகாலை உருவாக்கும் போது, அதன் மீது கோல்டன் கலரில் ஹாரி பூசப்படுவதால், இந்த இனிப்பின் பெயர் Gold Ghari என்று அழைக்கப்படுகிறது
குஜராத்தில் Ghari இனிப்புகள் வழக்கமாக ஒரு கிலோவுக்கு 660-820 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஆனால் இந்த கடைக்காரர் இந்த இனிப்பில் கோல்ட் கலந்துள்ளார். இதன் காரணமாக இது மிகவும் விலை உயர்ந்தது.
தங்கம் என்பது அனைவரும் விருப்பமான ஒன்று, மேலும் பண்டிகை காலங்களில் தங்கம் வானுவது ஆரோக்கியமாக கருதப்படுவதால் Gold Ghari இனிப்பு தயாரித்துள்ளோம். தற்போது, அதன் விற்பனை குறைவாக உள்ளது. ஆனால் வரும் நாட்களில் தேவை அதிகரிக்கும் என்றும், மக்கள் இந்த இனிப்பை விரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.
குஜராத்தில், இந்த Gold Ghari இனிப்புகள் தீபாவளி மற்றும் பிற பண்டிகை காலங்களில் விற்கப்படுகின்றன. இந்த இனிப்பு விற்பனை குறிப்பாக சூரத் நகரில் அதிகம்.
ஷரத் பூர்ணிமாவின் இரண்டாவது நாளில், சண்டி பத்வா (Chandi Padva) நாளில் Ghari இனிப்புகளை சாப்பிடும் பாரம்பரியம் உள்ளது. (ராய்ட்டர்ஸ்)