Oscars 2022: ஆஸ்கார் விருதுகள் விழாவின் உணர்வுபூர்வமான தருணங்கள்

Mon, 28 Mar 2022-4:37 pm,

நடிகர் வில் ஸ்மித், மேடையில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அடித்தார். ஆஸ்கார் விழாவில் தனது மனைவியின் தோற்றத்தைப் பற்றி நகைச்சுவையாகக் கூறியதற்காக நகைச்சுவை நடிகரை கடிந்துக் கொண்டார்..

சில நிமிடங்களுக்குப் பிறகு, 'கிங் ரிச்சர்ட்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஸ்மித் பெற்றுக்கொண்டபோது, ​​ஸ்மித் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார், ஆனால் யாரை அடித்தாரோ அவரிடம் மனிப்புக் கேட்கவில்லை.

கிறிஸ் ராக்கை  வில் ஸ்மித் அடித்தபோது, அது  ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நகைச்சுவையாகத் தோன்றியது, ஆனால் ஸ்மித், "என் மனைவியின் பெயரை சொல்லக்கூடாது" என்று கூறியபோது சம்பவத்தின் தீவிரம் புரிந்தது. (Photograph:Twitter)

மேகன் தி ஸ்டாலியன், விருதுக்கு பரிந்துரைக்கப்படவோ அல்லது தொகுப்பாளர்களில் ஒருவராகவோ இல்லை, ஆனால் இன்னும் அவர் 'வி டோன்ட் டாக் அபவுட் புருனோ' நிகழ்ச்சியில் தனது நடிப்பிற்காக தலைப்புச் செய்திகளில் இருக்கிறார். (Photograph:Twitter)

பியோனஸ் ஆஸ்கார் 2022 இரவு தொடங்கினார்! 40 வயதான இசைக்கலைஞர், 'கிங் ரிச்சர்ட்' வாழ்க்கை வரலாற்றுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் விருது வழங்கும் விழாவை சிறப்பித்தார்.   (Photograph:Twitter)

இந்த ஆண்டு, ஆஸ்கார் விருதுகள் விழாவை ஏமி ஷுமர், வாண்டா சைக்ஸ் மற்றும் ரெஜினா ஹால்  என மூன்று தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கிஆர்கள்.  (Photograph:Twitter)

வில் ஸ்மித் இந்த ஆண்டு ஆஸ்கார் விழாவில் அனைவரையும் கவர்ந்தார். சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிவிட்டு, பின்னர், அவர் செய்ததற்கு அழுது மன்னிப்பு கேட்டார். (Photograph:Twitter)

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் கிளாசிக்கல் மியூசிக்கலான 'வெஸ்ட் சைட் ஸ்டோரி'யின் ரீமேக்கில் அனிதாவாக நடித்ததற்காக அரியானா டிபோஸ் தனது முதல் அகாடமி விருதை ஞாயிற்றுக்கிழமை வென்றார்.

(Photograph:AFP)

ட்ராய் கோட்சூர் தனது சிறந்த துணை நடிகருக்கான விருதை ஆஸ்கார் நாயகன் யூன் யூ-ஜங்கிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக மேடை ஏறியபோது, ​​இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவின் மிக அழகான தருணம், இணையத்தில் புயலை கிளப்பியது.

அனைவரும் கோட்சூரைப் பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ட்ராய்யைப் பார்த்துக்கொண்டிருக்கும் யுனின் முகபாவனைகளை நெட்டிசன்கள் கண்டுகளித்தனர். மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற தருணம் அது! (Photograph:Twitter

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link