Astro Traits: பேசியே மயக்கி நினைத்த காரியத்தை சாதித்து கொள்ளும் ‘சில’ ராசிகள்!
மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்பதால் இவர்களிடம் பேச்சுத்திறன் இயல்பாகவே இருக்கும். காரியத்தை சாதித்துக் கொள்ள கிடைக்கும் எந்த வித வாய்ப்பையும் நழுவ விடாமல் தித்திக்கும் வகையில் பேசுவார்கள். வியாபாரத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க, இந்த குணம் பெரிதும் கை கொடுக்கிறது.இதனால், தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வரை, மிகுந்த லாபம் அடைவார்கள்.
கடக ராசிக்காரர்கள் எப்போதும் இனிமையாகப் பேசுவார்கள். சண்டை என்பது அவர்களின் அகராதியில் கூட இல்லை. தங்கள் இஷடப்படி வேலையைச் செய்தாலும், மற்றவர்கள் அவ்வாறு உணராத வகையில் பேசுவார்கள். அதனால்தான் அவர்கள் மீது அனைவருக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பதோடு, அவர்களின் எண்ணத்திற்கு கீழ் படிகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ளவர்கள் என்பதோடு, பொதுவாக சண்டையிடுவதை விட தங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள செய்வதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால்தான் இவர்களது காதல்-திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அவர்கள் மற்றவர்களின் நலம் விரும்பியைப் போல் நடந்துகொண்டு தங்கள் வேலையை எளிதாக சாதித்துக் கொள்வார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் நண்பராக நடித்து காரியத்தை சாதித்து கொள்வார்கள். உண்மையில், இவர்கள் தன்னலம் மட்டுமே குறியாக கொண்டவர்கள். காரியம் ஆனதும், திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இதனால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் இனிமையாகப் பேசுவதில் சிறந்தவர்கள். இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம். பல கனவுகளைக் காட்டி , மற்றவர்களை தங்களது வலையில் சிக்க வைத்து காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். தித்திக்க பேசி மனதை கவருவதில் வல்லவர்கள்.