7th Pay Commission: விரைவிலேயே DA, DR hike பற்றிய அறிவிப்பை வெளியிடும் மோடி அரசு

Fri, 19 Feb 2021-5:57 pm,

அரசாங்கத்தின் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவிலேயே நல்ல செய்தி வரவுள்ளது.

 

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை அறிவித்த பின்னரும், மத்திய பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை அதிகரித்திரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. மோடி அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஊடகங்களில் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வுக்கு வழிவகுக்கும். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் உற்சாகமான ஒரு விஷயமாக, அகவிலை நிவாரணம் (DR) குறித்த அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிடும்.

DA உயர்வு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இருக்கும். தற்போது, ​​மத்திய ஊழியர்களுக்கு DA 17 சதவிகிதம் கிடைக்கிறது. இதனுடன் 4 சதவிகித DA அதிகரிக்கப்பட்டால், மொத்த DA 21 சதவிகிதமாக உயரும். COVID-19 நெருக்கடிக்கு பின்னர், அரசாங்கத்தின் அறிவிப்பை நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர். DA உயர்வு ஜனவரி முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திற்கு இருக்கும்.

COVID-19 நெருக்கடியின் காரணமாக 2021 ஜூலை வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை நிறுத்தி வைக்க நிதி அமைச்சகம் 2020 ஏப்ரலில் முடிவு செய்தது. COVID-19-ஆல் உருவான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை வழங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இதற்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு பற்றி ஜனவரி 1, 2020-ல் பேசப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA-வை 4 சதவீதமாக உயர்த்தி 21 சதவீதமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் ஏப்ரலில் எடுக்கப்பட்ட முடிவால், இந்த 4 சதவீத உயர்வு நிறுத்தப்பட்டது. DA மற்றும் DR-ரின் இந்த தவணைகளை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முடக்கியதால் 2021-22 ஆம் ஆண்டில் மொத்த சேமிப்பு ரூ .37,530 கோடியாக இருக்கும் என்றும் செய்தி நிறுவனம் பி.டி.ஐ. தெரிவித்தது. பொதுவாக, மாநிலங்கள் DA மற்றும் DR வழங்கலில் மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றுகின்றன. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR-ன் இந்த தவணைகளை நிறுத்தியதால் மாநிலங்களின் சேமிப்பு சுமார் ரூ .82,566 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று பி.டி.ஐ. கூறியது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link