7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடித்தது Jackpot, இந்த மாதம் DA hike!!

Tue, 05 Jan 2021-4:51 pm,

1.1.2004 அல்லது அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட மற்றும் தேசிய ஓய்வூதிய முறைமையின் (NPS) கீழ் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, மத்திய சிவில் சர்வீசஸ் (CCS) (EOP) விதிகளின் கீழ் இயலாமை நலன்களுக்கான முந்தைய விதிகள் அத்தகைய இழப்பீட்டை வழங்காததால், இந்த புதிய உத்தரவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு சேவை விதிகளில் ஒரு ஒழுங்கின்மையை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய உத்தரவின்படி, NPS-இன் கீழ் வரும் எந்தவொரு ஊழியருக்கும் விதி (9) இன் கீழ் அசாதாரண ஓய்வூதியம் (EOP) கிடைக்கும்.

இது தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது. தற்போதுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 'ஊனமுற்றோர் இழப்பீட்டை' தொடர அரசாங்கம் அறிவித்துள்ளது. தனது கடமையைச் செய்யும்போது, ​​ஊழியர் ஊனமுற்று, அவர் சேவையில் தொடர்ந்து இருந்தால், அவர் தொடர்ந்து 'ஊனமுற்றோர் இழப்பீடு' பெறுவார். மேலும், இந்த ஆண்டு அகவிலைப்படியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் இளம் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) வீரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜீதேந்திர சிங் ஜனவரி 1 ம் தேதி தெரிவித்தார். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF), எல்லை பாதுகாப்பு படை (BSF) ஆகியவை அடங்கும். இந்த வீரர்கள் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிவதால், அவர்கள் ஊடமடையும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், அவர்களின் வேலையின் தன்மையும் மன அழுத்தம் நிறைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த அனைத்து புதிய முயற்சிகளின் இறுதி குறிக்கோள், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும், தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களும், ஓய்வூதியம் பெறும் குடும்ப நபர்களும், மூத்த குடிமக்களும் எளிதான மற்றும் பிரச்சனையற்ற வாழ்க்கையை வழங்குவதாகும் என்று சிங் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் பணவீக்கத்தின் சராசரியாக ஒரு குறியீட்டை வெளியிடுகிறது. இதன் அடிப்படையில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அளவு கடந்த 12 மாத தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இது முந்தைய 12 மாதங்களின் சராசரியாக கணக்கிடப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், 2021 ஆம் ஆண்டில், அவர்களுக்கு அகவிலைப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்திகளின்படி, 2021 ஜனவரியில் இதில் நான்கு சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். ஜூலை 2020 முதல், 7% அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் அளிக்கப்படவில்லை.

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அதிகமாக அகவிலைப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசாங்கம் அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது. இது 48 லட்சம் மத்திய ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும். அகவிலைப்படி ஒப்புதல் இருந்தபோதிலும், 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய் மற்றும் லாக்டௌன் காரணமாக டிஏ செலுத்துதல் நிறுத்தப்பட்டது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link