Paytm மூலம் LPG Gas Cylinder-ஐ புக் செய்தால் 500 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம்
Paytm தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது. இதன் கீழ் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதில் நீங்கள் 500 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும்.
இந்த கேஷ்பேக்கைப் பயன்படுத்த, முதலில் நீங்கள் Paytm செயலியைத் திறக்க வேண்டும். இந்த செயலி உங்கள் தொலைபேசியில் புதுப்பிக்கப்படவில்லை என்றால், முதலில் அதை புதுப்பித்துக் கொள்ளவும். Paytm பயன்பாட்டைத் திறந்த பிறகு, நீங்கள் ஸ்லைடு செய்து கீழே வர வேண்டும். கீழே நீங்கள் ‘Offers’-ஐக் காண்பீர்கள். இதில் இருக்கும் ‘Book LPG Gas Cylinder’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Paytm-ன் இந்த ஆப்ஷனின் மூலம் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்தால், 500 ரூபாய் வரை உங்களால் கேஷ்பேக் பெற முடியும்.
'Book LPG Gas’ ஆப்ஷனிற்குச் சென்ற பிறகு, விளம்பர குறியீட்டைக் (Promo Code) காண்பீர்கள். எரிவாயுவை முன்பதிவு செய்யும் போது இந்த குறியீட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு, நீங்கள் 'Book Cylinder’ பக்கத்திற்குச் சென்று தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் காண்பிக்கப்படும். எந்தவொரு சலுகையையும் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி கண்டிப்பாக படிக்கவும்.
சலுகையைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி கேட்கப்படும். நீங்கள் ஐடியை உள்ளிட்டவுடன், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். இதற்குப் பிறகு நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தலாம். விளம்பர குறியீட்டைப் பயன்படுத்திய பிறகு நீங்கள் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், ரூ .5 முதல் ரூ .500 வரை கேஷ்பேக் உங்கள் Paytm கணக்கில் சேர்க்கப்படும்.