BSNL அளிக்கும் Rs 249 first recharge plan: பல வித சலுகைகள், முழு விவரம் இதோ!!
)
அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இந்த திட்டத்தை இந்தியா முழுவதற்குமாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் முதலில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். நிறுவனம் இந்த திட்டத்தை நீட்டிக்கவும் முடியும். கடந்த வாரம், BSNL 47 ரூபாய்க்கான FRC-ஐ கொண்டு வந்தது. இதில் 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் 14GB தரவும் கிடைக்கும்.
)
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 28 நாட்களுக்கான செல்லுபடியாகும் தன்மையுடன் தினசரி 2GB தரவு கிடைக்கும். இதில் வரம்பற்ற உள்நாட்டு அழைப்பு கிடைக்கிறது. மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்.-ம் இலவசமாகக் கிடைக்கும்.
)
இந்த திட்டத்தில் Vi மூலம் 1.5GB தரவு தினமும் வழங்கப்படுகிறது. உள்ளூர் (Local) மற்றும் தேசிய (National) அழைப்புகள் வரம்பற்றவையாக உள்ளன. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-க்கான இலவச சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 28 நாட்களாகும். இதில் Vi Movies மற்றும் TV-க்கான அணுகலும் கிடைக்கும்.
ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், தினமும் 1.5GB தரவு கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்புகளுக்கான ஆப்ஷனும் உள்ளது. 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் 100 எஸ்எம்எஸ்-ம் இலவசமாக கிடைக்கும்.
BSNL திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்களுக்கான செல்லுபடி காலம் கிடைக்கும். இருப்பினும், இது ஒரு விளம்பர சலுகையாகும். இது மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.