Budget 2021: Fridge, Furniture விலைகள் அதிகரிக்குமா? குறையுமா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ஆதாரங்களின் மதிப்பீட்டின் படி, தளபாடங்கள், செப்பு ஸ்கிராப், ரசாயன, தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரப்பர் தயாரிப்புகளின் மூலப்பொருட்களில் சுங்க வரியில் மாற்றங்கள் ஏற்படலாம். மெருகூட்டப்பட்ட வைரங்கள், ரப்பர் பொருட்கள், தோல் ஆடைகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்ற 20 க்கும் மேற்பட்ட பொருட்களில் இறக்குமதி வரி குறைக்கப்படக்கூடும் என பி.டி.ஐ செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் விளைவை நுகர்வோர் வாங்கும் பொருட்களில் காண முடியும். சுங்க வரி குறைவதால், சில பொருட்களின் விலைகளும் மலிவாகக்கூடும். ஆதாரங்களின்படி, இந்த பொருட்களின் இறக்குமதி வரியில் ஏற்படும் மாற்றத்தால் ஆத்மநிர்பர் பாரத், அதாவது தற்சார்பு இந்தியா பிரச்சாரத்திற்கு உதவி கிடைக்கும். மேலும், உள்நாட்டு உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும்.
ஃபர்னிச்சர்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ரஃப் வூட், ஸ்வான் வூட் மற்றும் ஹார்ட் போர்டு போன்ற சில மூலப்பொருட்களில் சுங்க வரி அகற்றப்படக்கூடும் எனதெரிய வந்துள்ளது. அதாவது, சில மர வகைகள் மற்றும் கடின பலகை போன்றவற்றில் சுங்க வரி முற்றிலுமாக ஒழிக்கப்படக்கூடும். செய்திகளின்படி, விலையுயர்ந்த மூலப்பொருட்கள், சர்வதேச சந்தையில் இந்தியாவின் செயல்திறனை பாதிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நம் நாட்டிலிருந்து தளபாடங்களின் ஏற்றுமதி மிகக் குறைவாக (சுமார் 1 சதவீதம்) உள்ளது. அதே நேரத்தில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் இந்தியாவை விட இதில் முன்னிலையில் உள்ளன.
ஆதாரங்களின்படி, நிலக்கரி தார், செப்பு ஸ்கிராப் ஆகியவை மீதான சுங்க வரியைக் குறைப்பதைப் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குளிர்சாதன பெட்டிகள் (Fridge), சலவை இயந்திரங்கள் (Washing Machine) மற்றும் துணி உலர்த்திகள் (Cloth Drier) போன்ற சில பொருட்களுக்கான வரி அதிகரிக்கக்கூடும்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் போன்ற பல துறைகளுக்கு தயாரிப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் (PLI) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதாரங்களின்படி, இந்த பொருட்களின் இறக்குமதி வரியில் செய்யப்படும் மாற்றம் தற்சார்பு இந்தியா பிரச்சாரத்திற்கு உதவும். மேலும் இது உள்நாட்டு உற்பத்தியையும் ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு, தளபாடங்கள், பொம்மைகள் மற்றும் காலணி போன்ற பல தயாரிப்புகளின் மீதான இறக்குமதி வரிகளை அரசாங்கம் அதிகரித்தது.