இதை உடனடியாக செய்யவில்லை என்றால் உங்கள் SBI கணக்கு செயலிழந்து விடும்

Tue, 02 Mar 2021-8:36 pm,

வங்கி பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், கணக்கு வைத்திருப்பவர் தனது ஆதார் மற்றும் பான் அட்டையை வங்கிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். வங்கியை மேலும் பாதுகாப்பாக மாற்றுவதற்காக, போலி நபர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

உங்கள் கணக்கு எந்த வங்கியில் இருந்தாலும், அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று இந்த வேலையை செய்து விடலாம். ‘Update Your KYC’ பிரிவிற்கு சென்று, உங்கள் பெயர் மற்றும் முகவரியின் சரியான தகவலை நீங்கள் கொடுக்க வேண்டும். மேலும் ஆதார்-பான் அட்டையின் நகலையும் பதிவேற்ற வேண்டும். வீட்டில் இருந்தபடியே, சில நிமிடங்களில் இந்த வேலையை மிக எளிதாக செய்துவிட முடியும். ஆகையால் இன்னும் நீங்கள் இந்த செயல்முறை செய்யவில்லை என்றால், தாமதிக்காமல் உடனடியாக KYC ஐ அப்டேட் செய்யவும்.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கிளைக்கு சென்றும் இந்த வேலையை செய்து முடிக்கலாம். இதற்கு, நீங்கள் வங்கிக்குச் சென்று ஆதார் மற்றும் பான் அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால், உங்கள் KYC புதுப்பிக்கப்படும். அதன் தகவல்கள் மொபைலில் செய்தி மூலமும் உங்களுக்கு வழங்கப்படும். இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பான வங்கி செயல்முறைக்கு KYC மிகவும் முக்கியமானது.

உங்கள் கணக்கிற்கு KYC செய்து முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு பல இழப்புகளும் நேரிடக்கூடும். KYC செய்யப்படாத கணக்குகளில் அரசாங்க நலத்திட்டங்களின் தொகை மாற்றப்படாது. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் அடுத்த தவணையும் வரவுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். உங்கள் KYC ஐ நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், தாமதிக்காமல் உடனே அதை செய்யுங்கள். இதை செய்துவிட்டால், அரசாங்கத் திட்ட பணம் உங்கள் கணக்கில் நேரடியாக வந்தடையும். இது தவிர, உங்கள் வங்கி பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக இருக்கும், எந்த பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link