EPFO Latest: PF செயல்முறையில் வரவுள்ள பெரிய மாற்றங்கள் என்ன தெரியுமா?
நாடாளுமன்றக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில், 'வரையறுக்கப்பட்ட நன்மைகள்' என்பதற்கு பதிலாக, 'வரையறுக்கப்பட்ட பங்களிப்புகள்' முறையை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது EPFO ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் 'வரையறுக்கப்பட்ட நன்மைகள்' மாதிரியாகும். வரையறுக்கப்பட்ட பங்களிப்பு முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பி.எஃப் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புக்கு ஏற்ப நன்மைகளைப் பெறுவார்கள், அதாவது அதிக பங்களிப்பு அதிக நன்மை என்ற முறையில் இது செயல்படும்.
ஊடக அறிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி, தற்போது EPFO இல் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள். PF-க்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு இதில் கால் பங்கிற்கும் குறைவானதாகும். இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் நிதி ஆதரவளிப்பது கடினம் என்று அதிகாரிகள் வாதிடுகின்றனர். எனவே, வரையறுக்கப்பட்ட பங்களிப்புகளின் முறையை பின்பற்ற வேண்டும் என்பது அவர்களின் கருத்து. இதன் மூலம் இந்த செயல்முறை நடைமுறைக்குரியதாக இருக்கும்.
EPFO ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 2000 அல்லது ரூ .3000 ஆக உயர்த்துமாறு EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) பரிந்துரைத்தது. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு தொழிலாளர் அமைச்சகத்திடம் பதில் கோரியிருந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ .2000 ஆக உயர்த்தினால் அரசுக்கு ரூ .4500 கோடி செலவாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ரூ .3000 ஆக உயர்த்தப்பட்டால், அது ரூ .14595 கோடியாக கூடுதல் சுமையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
PF பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் குறையவில்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள EPFO-வின் பெரும்பகுதியால் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் எந்த லாபமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். COVID-19 தொற்றுநோயால் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டதால், இந்த முதலீடு எதிர்மறையான விளைவுகளையே அளித்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, EPFO-வின் 13.7 லட்சம் கோடி ரூபாய் நிதி கார்பஸில், 5 சதவீதம் மட்டுமே, அதாவது ரூ .4600 கோடி சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, EPFO நிதியை ஆபத்தான தயாரிப்புகள் மற்றும் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பதை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது.
EPFO கணக்குகளில் FY2019-20 க்கு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பல்வேறு கணக்குகளில் 8.5 சதவீத வட்டியை வரவு வைத்துள்ளது. ஆகையால் EPFO கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கணக்கு இருப்பை அறிந்து கொள்வது முக்கியம். epfindia.gov.in என்ற EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இதை ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.