EPFO alert: ஓய்வூதியம் பெறுவோர் இந்த தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

Mon, 11 Jan 2021-3:38 pm,

EPFO, கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வூதியம் பெறுவோரின் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க 2021 பிப்ரவரி 28 வரை ஓய்வூதியதாரர்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்தது. இது 35 லட்சம் EPFO ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EPS 1995 இன் கீழ், பிப்ரவரி 28, 2021 வரை ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டியவர்களுக்கு இது பொருந்தும்.

ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் பிப்ரவரி 28, 2021-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, 3.65 லட்சம் பொது சேவை மையங்கள் (CSCs), ஓய்வூதிய விநியோக வங்கிகளின் கிளைகள், 1.36 லட்சம் தபால் நிலையங்கள், தபால் துறையின் கீழ் பணிபுரியும் 1.90 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமப்புற தபால் துறை சேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் உள்ளன. இந்த நபர்கள் மற்றும் அமைப்புகளின் உதவிகளை ஓய்வூதியதாரர்கள் பெறலாம்.

ஓய்வூதியம் பெறுவோர் அருகிலுள்ள CSC-களை கண்டுபிடிப்பதற்கு (https://locator.csccloud.in/) என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம். தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு இடங்களிலிருந்தோ ஆயுள் சான்றிதழை அனுப்ப தபால் நிலையத்தில் ஆன்லைன் கோரிக்கையை சமர்பிக்கலாம். (http: // ccc. cept.gov.in/covid/request.aspx).

ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் வங்கி கிளைகளிலோ அல்லது அருகிலுள்ள தபால் நிலையங்களிலோ, 135 பிராந்திய அலுவலகங்கள் அல்லது 117 EPFO மாவட்ட அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம். 3.65 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களின் (CSCs) நாடு தழுவிய நெட்வொர்க்கிலும் இந்த சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியம் பெறுவோருக்காக இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) சமீபத்தில் டோர் ஸ்டெப் (வீட்டி வாசலில்) டி.எல்.சி சேவையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link