இனி Ayushman Bharat திட்டத்தின் PVC Card-ஐ பயனாளிகள் இலவசமாகப் பெறலாம், கட்டணம் கிடையாது

Mon, 22 Feb 2021-5:28 pm,
1Ayushman Bharat Entitlement Card made free

மோடி அரசு இப்போது உரிம அட்டையை (Entitlement Card) இலவசமாக்கியுள்ளது.  முன்பு இதற்கு 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவு ஏழைக் குடும்பங்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்கும்.

 

How to get Ayushman Bharat card now

தற்போதுள்ள வழிமுறைப் படி, ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் தகுதி அட்டைக்கான பொது சேவை மையங்களை (CSC) தொடர்பு கொள்ள வேண்டும். கிராமப்புற ஆபரேட்டரிடம் ரூ .30 செலுத்திய பின்னர் அட்டை கிடைக்கும். இப்போது புதிய முறையின் கீழ் முதல் முறையாக, அட்டையை பெறுவது இலவசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பயனாளி நகல் அட்டையை பெறவோ அல்லது அட்டையை மறுபதிப்பு செய்யவோ ரூ .15 செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்குப் பிறகு இந்த அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

Deal between NHA and CSC

ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு பின்னர் மோடி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் CSC ஆகியவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய விதிகள் செயல்படுத்தப்படுகின்றன. NHA ஒரு அரசாங்க நிறுவனமாகும். இது இந்த திட்டத்தின் நிர்வாகத்தை கவனிக்கிறது. CSC அதன் ப்ரொடெக்ஷன் பணிகளைக் கையாளும் ஒரு தனியார் நிறுவனமாகும். ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும் போது என்.எச்.ஏ முதல் முறை சி.எஸ்.சிக்கு 20 ரூபாய் செலுத்தும். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், PVC ஆயுஷ்மான் அட்டைகளை தயாரிப்பதாகும். இது தவிர, திட்டத்தின் கீழ் இந்த அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளது.

ஆயுஷ்மான் திட்டத்தைப் பயன்படுத்த PVC அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக இருக்காது என்று NHA தலைமை நிர்வாக அதிகாரி ராம்சேவக் சர்மா தெரிவித்துள்ளார். பழைய அட்டைகளை வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகாதார அதிகாரிகள் PVC கார்டுகள் மூலம் பயனாளிகளை அடையாளம் காண முடியும். மேலும், தேவையில் இருக்கும் பயனாளிகள் எந்தவிதமான மோசடியும் இல்லாமல் சுகாதார சேவைகளைப் பெற முடியும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மோடி அரசு 2017 இல் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்தவொரு தனியார் மருத்துவமனையிலும் தேவைக்கேற்ப சிகிச்சை பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link