அருமையான திட்டம், மாதம் ரூ.5000 பென்சன் கிடைக்கும்!

Wed, 21 Apr 2021-9:36 pm,

மத்திய மோடி அரசு 2015ஆம் ஆண்டு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

60 வயதுக்கு பின்னர் ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெற வேண்டுமெனில் நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். இதில் நீங்கள் மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. 

இத்திட்டத்துக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது வங்கியில் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதில் இணைவதற்கு உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் கட்டாயமாகும். உங்களது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தும் SMS வரும். அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link