Tension-ஐ அண்டவிடாமல் தடுக்க இந்த stress buster உணவுகள் உங்களுக்கு உதவும்
பிஸ்தாவில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளன. இவை பதட்டமான நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகின்றன. இதன் காரணமாகத்தான் பெரும்பாலான மக்கள் பணியிடத்தில் பிஸ்தாவை வைத்துக்கொண்டு அவ்வப்போது உட்கொள்கிறார்கள். அதிக இறுக்கம் அல்லது அழுத்தத்தில் இதை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சோர்வான மனநிலையை மேம்படுத்த சாக்லேட் சிறந்த வழியாகும். சாக்லேட் சாப்பிடுவது உடலில் எண்டோர்பின்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக மன அழுத்தம் நீக்கப்பட்டு நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை நீங்கள் உட்கொண்டால், அது உற்சாகத்தை உண்டு பண்ணும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதில் உள்ள மெக்னீசியம் காரணமாக, உடலில் உள்ள சோர்வு தளர்ந்து, தூக்கம் நன்றாக வரும்.
தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் வயிற்றை வலுப்படுத்துவதன் மூலம் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. தயிர் உட்கொள்வதால் மூளைக்கு நேர்மறையான சமிக்ஞைகள் கிடைக்கின்றன. கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த தயிரை தினமும் உட்கொண்டால், மன அழுத்தம் கண்டிப்பாக குறையும்.
வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது நமது இரத்த அழுத்தத்தை இயல்பாக்குகிறது. வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது ஆற்றலை அதிகரிக்கும். உடல்நல வல்லுநர்கள் காலை உணவில் வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்க இதுவே காரணமாகும். இதனால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கிறது. நாள் முழுதும் வாழைப்பழம் நம்மை ஊக்கத்துடன் இருக்க வைக்கிறது.