புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது Indian Railways!! சுலபமானது பார்சல் அனுப்பும் முறை!!

Wed, 26 Aug 2020-5:36 pm,

சோதனை மட்டத்தில், உத்னா, உமர்கம், ஷாலிமார், டெல்லி மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் உங்கள் இடத்திலிருந்தே பார்சல்களை முன்பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் வசதியை வழங்கும். இந்த நிலையங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் செப்டம்பர் 1 க்குள் இறுதி செய்யப்படும்.

மக்கள் வீடுகளுக்கு பார்சல்களை வழங்க மத்திய ரயில்வே இந்தியா போஸ்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ரயில்வேயின் பார்சல் துறையிலிருந்து பார்சலை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் பணியை தபால் துறை செய்யும். தனி நபர்களும் நிறுவனங்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதிக்கு பெயரளவு கட்டணமே செலுத்த வேண்டும்.

மத்திய ரயில்வே இந்த வசதியை தற்போதைக்கு மும்பை, புனே மற்றும் நாக்பூரில் துவக்கியுள்ளது. இந்த வசதி குறித்த கூடுதல் தகவலுக்கு, தொலைபேசி எண் 9324656108 ஐ அழைக்கலாம். இது தவிர, adpsmailmah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் செய்தி அனுப்பி நீங்கள் தகவல்களைப் பெறலாம்.

பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியாக உங்கள் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பலாம். இதற்காக, நீங்கள் ரயில் நிலையங்களில் உள்ள பார்சல் துறைக்குச் சென்று உங்கள் சாமான்களை முன்பதிவு செய்ய வேண்டும். பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சாதாரண சரக்கு ரயில்களை விட மிக வேகமாக உங்கள் பொருட்களை கொண்டு சேர்க்கும்.

லாக்டௌனின் போது, ​​பார்சல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அவற்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link