IRDAI அளித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு கிடைக்கும், விவரம் உள்ளே

Tue, 02 Mar 2021-5:25 pm,

தேசிய காப்பீட்டு அகாடமியின் நிகழ்ச்சியில் IRDAI தலைவர் சுபாஷ் சந்திர குந்தியா பேசினார். அதில் அவர் ஒரு நபருக்கு பிறப்பிலிருந்தோ, அல்லது பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி வழங்காத நோய்களோ இருந்தால், அந்த நோய்களுக்கும் காப்பீட்டு நிறுவனம் பாலிசிகளை அளிக்க வேண்டும் என்று கூறுனார். மனிதனின் கைகளில் அல்லாத, அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நோய்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியை மறுக்க முடியாது என அவர் கூறினார். இந்த விஷயத்தை காப்பீட்டு நிறுவனங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிக தரவு பகுப்பாய்வு செய்து பாலிசிதாரர்களை காப்பீட்டிலிருந்து ஒதுக்கி வைப்பது தவறு என்றும் IRDAI கூறியுள்ளது.

இந்த திட்டத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்த மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைத் தொடங்கவும் அவர் அறிவுறுத்தினார். பாலிசியுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளைப் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும். பாலிசியுடன் காப்பீட்டாளரின் அல்லது வாடிக்கையாளரின் அனுபவத்தை இது மேம்படுத்தும் என்று IRDAI கூறியது. பாலிசிதாரர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் காப்பீட்டு தயாரிப்புகளுடன் மதிப்பு கூட்டப்பட்ட சேவையையும் சேர்க்கும் என்று குந்தியா கூறினார்.

காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும். அதாவது நீரிழிவு நோயாளி எந்த உணவுத் திட்டத்தை பின்பற்ற வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். அவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் வழங்கப்படுவார்கள். நோயாளிகள் சுகாதார பரிசோதனைகளைப் பெறுவதோடு ஆலோசனை வசதிகளும் கிடைக்கும். இவை அனைத்தும் கூடுதல் சேவையில் சேர்க்கப்படும். நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதை விட, நோயாளிகள் நோய்களிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, குறைந்தபட்சமாக மருத்துவமனைக்கு செல்லும் வகையில் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஆகிய அம்சங்களில் இனி காப்பீட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் IRDAI கூறியுள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் கவனம் தங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் அதிகம் இருக்க வேண்டும் என்றும் RDAI கூறியுள்ளது.

COVID-19 க்கு இதுவரை ரூ .7136.3 கோடி கோரப்பட்டுள்ளது என்று குந்தியா கூறினார். இதில் கொரோனா கவசம் போன்ற உரிமைகோரல் 700 கோடியாகும். அதேசமயம், தொற்றுநோய் தொடர்பான ஆயுள் காப்பீட்டு உரிமம் 1242 கோடி ரூபாய் ஆகும்.

 

கோவிட் -19 இல் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கிளெயிம்களை காப்பீட்டு நிறுவனங்கள் தீர்த்து வைத்துள்ளன. சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் அபாயமும் குறைக்கப்படுகிறது. செய்தியின் படி, சாண்ட்பாக்ஸ் விதிகள் காரணமாக காப்பீட்டில் ஒரு பெரிய அளவிலான புதுமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், நிறுவனங்கள் புதுமையான முறைமைகளில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. குறிப்பாக, உடல்நலம் மற்றும் நிலையான திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link