eSIM வாங்கி hi-tech ஆகலாம் வாங்க: எப்படி வாங்குவது, நன்மை, தீமைகள், விவரம் உள்ளே

Wed, 25 Nov 2020-3:28 pm,

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் நேரடியாக e-SIM-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிம்மை ஒரு பாகமாக உங்கள் ஃபோனில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. Photo: Reuters

 

Jio, Airtel, Vodafone Idea போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு e-SIM வாங்குவதற்கான வசதியை வழங்குகின்றன. Photo: Reuters

இந்த e-SIM மற்ற நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். நீங்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம், நிமிடங்களில் e-SIM-ஐ வாங்கி விடலாம். ஆனால், physical SIM கார்டைப் பொருத்தவரை, நீங்கள் கடைக்குச் சென்றுதான் அதை மாற்ற முடியும். இதில் உங்கள் நேரம் விரயமாகலாம்.

மற்றொரு நன்மை என்னவென்றால், நீங்கள் ஸ்மார்ட்போனின் சிம் ட்ரேவை பயன்படுத்த வேண்டியதில்லை. Physical SIM-ஐப் போல இது தொலைந்து போகும் அபாயமும் இருக்காது. Photo: Reuters

குறைபாடுகளைப் பற்றி பேசினால், சாதாரண சிம் கார்டை விட e-SIM கார்டின் விலை அதிகம். இது தவிர, e-SIM கார்டுகளை சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். Photo: Reuters

 

Vi நிறுவனத்தின் e-SIM பெற, நீங்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே போஸ்ட்பெய்ட் பயனராக இருந்தால், உங்கள் தற்போதைய சிம்மை e-SIM-க்கு மாற்றலாம். Vi இன் இந்த சேவை தற்போது மும்பை, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் மட்டுமே கிடைக்கிறது.

Jio மற்றும் Vi இரண்டிற்கும் SIM பெறும் செயல்முறை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. சிம் பெற, நீங்கள் கடைக்கு செல்ல வேண்டும். KYC படிவத்தை நிரப்பி நீங்கள் e-SIM-ஐ பெறலாம். இருப்பினும், e-SIM-ஐ பயன்படுத்த, அதை சப்போர்ட் செய்யும் ஃபோன் உங்களிடம் இருக்க வேண்டும்.

நீங்கள் Airtel பயனராக இருந்து, உங்கள் physical SIM-ஐ e-SIM-மாக மாற்ற விரும்பினால், 121 என்ற எண்ணுக்கு ஒரு SMS அனுப்ப வேண்டும். SMS-ல், நீங்கள் eSIM என்று எழுதி ஸ்பேஸ் விட்டு பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை எழுத வேண்டும். (அதாவது, eSIM-space-eMailID). நீங்கள் SMS அனுப்பிய பிறகு உங்களுக்கு ஒரு SMS வரும். அதை உறுதிப்படுத்த 60 வினாடிகளுக்குள் 1 என எழுதி அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, voice call மூலம் confirmation அளிக்க வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் (eMail ID) ஒரு QR Code வரும். அதை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் e-SIM activate ஆகி விடும். Photo: Reuters

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link