mAadhaar App Update: இனி உங்கள் ஆதார் செயலியில் 5 profile-களை சேர்க்கலாம்
டிஜிட்டல் இந்தியா செயல்முறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2017 ஆம் ஆண்டில் mAadhaar செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, பயனர்கள் "ஆதார் அட்டை" ஐ காகித வடிவத்தில் கொண்டு செல்ல தேவையில்லை என்ற வசதி கிடைத்தது.
இந்த செயலியில் UIDAI ஒரு புதிய முன்னேற்றத்தைச் செய்துள்ளது. இந்த மேம்பாட்டின் கீழ், mAadhaar இல் இனி 5 பேரின் ஆதார் அட்டை ப்ரொஃபைல்களை சேர்க்கலாம்.
ட்வீட் மூலம் mAadhaar செயலி மேம்பாடு குறித்த தகவல்களை UIDAI வழங்கியுள்ளது. முன்னதாக ஒரு mAadhaar செயலியில், மூன்று அதிகபட்ச ப்ரொஃபைல்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலியில், பயனர் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையில் 5 ப்ரொஃபைல்களைச் சேர்க்க, எந்த மொபைல் ஃபோனில் செயலி நிறுவப்பட்டுள்ளதோ, அதே மொபைல் ஃபோன் எண்தான் அந்த ஐந்து ஆதார் அட்டைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை உறுதி செய்வது அவசியமாகும்.