ஏப்ரல் 1: பால் முதல் பயணம் வரை, AC முதல் EB வரை அனத்தும் costly ஆகும்.
நீங்கள் ஒரு கார் அல்லது பைக்கை வாங்க திட்டமிட்டால், ஏப்ரல் 1 க்கு முன்பு வாங்கி விடவும். ஏனென்றால் அதற்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் விலையை அதிகரிக்கப் போகின்றன. மாருதி, நிசான், ஹீரோ ஆகியவை விலை உயர்வு பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளன. நிசான் தனது இரண்டாவது பிராண்டான டாட்சனின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1 2021 முதல், டிவி வாங்குவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும். கடந்த 8 மாதங்களில் டிவியின் விலை 3 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. டிவி உற்பத்தியாளர்களும் பி.எல்.ஐ திட்டங்களில் டிவியைக் கொண்டு வருமாறு கோரியுள்ளனர். ஏப்ரல் 1, 2021 முதல், டிவியின் விலை குறைந்தது 2 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும்.
இப்போது நீங்கள் விமானத்தில் பயணிக்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உள்நாட்டு விமானங்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 5 சதவீதம் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1 முதல் விமானப் பாதுகாப்பு கட்டணமும் (ஏ.எஸ்.எஃப்) அதிகரிக்கப் போகிறது. ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு விமானங்களுக்கான விமானப் பாதுகாப்பு கட்டணம் ரூ .200 ஆக இருக்கும். தற்போது இது 160 ரூபாய் ஆகும். சர்வதேச விமானங்களுக்கான கட்டணம் $ 5.2 முதல் $ 12 வரை அதிகரிக்கும். புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
பால் விலை அதிகரிக்கக்கூடும். விவசாயிகள் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து 49 ரூபாயாக உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். பாலின் புதிய விலைகள் ஏப்ரல் 1 முதல் பொருந்தும். இருப்பினும், பால் விலையை லிட்டருக்கு ரூ .55 ஆக உயர்த்துவதாக விவசாயிகளிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. ஆனால் விலை அந்த அளவிற்கு அதிகரிக்கப்படாது. ஏப்ரல் 1 பால் லிட்டருக்கு 49 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வது விலை உயர்ந்ததாக இருக்கும். உத்தரப்பிரதேச அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் வாரியம் 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தது 5 ரூபாயும் அதிகபட்சமாக 25 ரூபாயும் அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
பீகார் மக்கள் ஏப்ரல் 1 முதல் அதிக மின்சார கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மின்சாரத் துறையின் படி, தெற்கு மற்றும் வடக்கு பீகார் மின் விநியோக நிறுவனம் மின்சார விகிதத்தை 9 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பீகாரில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு, கோடைக்காலத்தில் ஏசி அல்லது ஃப்ரிட்ஜ் வாங்குவது பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால், அதற்கு அதிகம் செலவிட வெண்டி இருக்கும். ஏப்ரல் 1 முதல், ஏசி நிறுவனங்கள் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஏ.சி.யின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஏ.சி. தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை 4-6% அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. அதாவது, ஒரு யூனிட்டுக்கு ஏசியின் விலை ரூ .1500 முதல் ரூ .2000 வரை உயர்த்தப்படலாம்.