ஜனவரி 1 முதல் cheque clearance, UPI பரிவர்த்தனைகளில் வரப்போகும் பெரிய மாற்றங்கள் இவைதான்!!

Fri, 06 Nov 2020-4:41 pm,

Third Party செயலிகள் மீது இனி கடினமான விதிகள் விதிக்கப்படும். National Payments Corporation of India, third party செயலிகள் (TPAP) மீது 30% வரம்பை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.

எதிர்காலத்தில் எந்த ஒரு third party செயலியின் ஏகபோகத்தை தடுக்கவும், அவற்றின் அளவிற்கு ஏற்ப அவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு நன்மைகளைத் தடுக்கவும் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. NPCI இன் இந்த முடிவின் மூலம், எந்தவொரு கட்டண செயலிக்கும் UPI பரிவர்த்தனையில் ஏகபோகம் இருக்காது.

NPCI இன் படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அனைத்து வகையான கட்டண நுழைவாயில்கள் மற்றும் வங்கிகள் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பொது மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். UPI பரிவர்த்தனை மேலும் துரிதப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே third party செயலிகளில் NPCI கடுமையாக இருக்கிறது. ஜனவரி 1 க்குப் பிறகு, செயலியின் மொத்த அளவில் அதிகபட்சமாக 30 சதவீத பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும்.

 

2021 ஜனவரி 1 முதல், மோசடி காசோலைகளை சரிபார்க்க புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அனைத்து காசோலைகளும், Positive pay cheque முறை மூலம் மட்டுமே க்ளியர் செய்யப்படும். காசோலையை அளிக்கும்போது வாடிக்கையாளர், காசோலையை வங்கியில் பரிவர்த்தனை செய்பவரின் தகவலைக் கொடுப்பார். காசோலையை வழங்குபவர் மற்றும் அதை எடுத்துக்கொண்டு வருபவர் என இருவரது தகவல்களைப் பெற்ற பின்னரே வங்கி அதன் க்ளியரன்சை மேற்கொள்ளும்.

SMS, ATM, Mobile App மூலம் வாடிக்கையாளர்கள் காசோலைகளை எழுதுவது குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும். வங்கிகள் ரூ .50,000 க்கும் அதிகமான தொகைக்கு இந்த வசதியை வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி, வங்கி மோசடிகளைத் தடுக்க Positive pay cheque முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் கீழ், ரூ .50,000 க்கு மேல் தொகை உள்ள காசோலையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். இதைப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாளர் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link