Photo gallery of INS VIRAAT which was given farewell

Tue, 29 Sep 2020-4:39 pm,

ஐ.என்.எஸ் விராட் என்ற மிகப் பெரிய போர்க்கப்பல் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஐ.என்.எஸ் விராட் குஜராத்தின் ஆலங்கில் உள்ள உலகின் மிகப்பெரிய கப்பலின் பாகங்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் உடைக்கப்படும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போர்க்கப்பல் 11 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாக கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இது பூமியை 27 தடவை சுற்றி வந்ததற்கு சமம்.

 

கொச்சின் கப்பல் தளம் மற்றொரு பெரிய போர்க்கப்பலை உருவாக்கி வருவதாக கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ஐ.என்.எஸ் விராட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இந்த திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார். ஒரு நிபுணர் குழு தனது அறிக்கையில் aது 10 ஆண்டுகளுக்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது என கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ.என்.எஸ் விராட் 1959 இல் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதன் பெயர் அப்போது எச்.எம்.எஸ் ஹெர்மெஸ். 1984 ஆம் ஆண்டில் இந்தியா இதனை வாங்கி,  அதி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, 1987, மேம் மாதம் 12ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

ஐ.என்.எஸ் விராட் பல  முக்கிய நடவடிக்கைகளில். இவற்றில் 'ஆபரேஷன் ஜூபிடர்' மற்றும் இலங்கையில் 1989 அமைதி காக்கும் மிஷன் ஆகியவை அடங்கும். இது 2001 ல் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் பராக்ரம் என்னும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

 

இந்த கப்பல் 2012 ல் ஓய்வு பெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவின் வருகை தாமதமாக இருந்ததால், இது ஓய்வு பெறுவதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா 2014 இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐ.என்.எஸ் விராட் மார்ச் 6, 2017 அன்று ஓய்வு பெற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link