Ration Card விதிகளில் பெரிய மாற்றம்: இதை செய்ய மறக்காதீர்கள்!!
கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க, மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு OTP (அதாவது மொபைலில் கடவுச்சொல் பெறும் முறை) மற்றும் IRIS அங்கீகாரம் ஆகிய முறைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக பயோமெட்ரிக் அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
சிவில் சப்ளைஸ் துறையின் அதிகாரிகளின் கூற்றுப்படி, ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரும், ரேஷன் பொருட்களைப் பெற ஆதார் அட்டையை (Aadhaar Card) மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் OTP-ஐப் பெற முடியும். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பின்னர் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. இந்த மனுவில், பயோமெட்ரிக் அங்கீகாரம் காரணமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையின்படி, ரேஷன் கார்டு தொடர்பான இந்த விதி 2021 பிப்ரவரி 1 முதல் தெலுங்கானா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் ரங்கரெட்டி மாவட்டத்தில் IRIS அங்கீகார வசதி இல்லாததால், இந்த இடங்களில் மொபைல் OTP மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கிய ஆவணமாகும். இதன் உதவியுடன் ஏழைகளுக்கு மலிவான ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. பல அரசாங்க திட்டங்களை பயன்படுத்தவும் இது பயன்படுகிறது. இதனுடன், இது அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. மாநில அரசு ரேஷன் கார்டுகளை வெளியிடுகிறது. மத்திய அரசின் ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு திட்டத்தின் காரணமாக, ரேஷன் பொருட்களை இப்போது சொந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பெறலாம்.
நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை பெறவில்லை என்றால், அதற்கு எந்த அரசாங்க அலுவலகத்திற்கும் செல்ல தேவையில்லை. ஏனெனில் இப்போது ரேஷன் கார்டை உருவாக்கும் செயல்முறை ஆன்லைனில் வந்துவிட்டது. ரேஷன் கார்டுகள் இரண்டு வகைகளில் உருவாக்கப்படுகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கும் அதன் மேலே இருப்பவர்களுக்கும் வெவ்வேறு ரேஷன் கார்டுகள் அளிக்கப்படுகின்றன.
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களிடம் ஒரே ஒரு மாநிலத்தின் ரேஷன் அட்டை மட்டுமே இருக்க முடியும். அதில் குடும்பத் தலைவன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்க்கப்படும். இதனைப் பெற இப்போது முன்பைப் போல அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்கள் மாநிலத்தின் உணவு போர்ட்டலுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக, நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிக்கிறீர்கள் என்றால், https://fcs.up.gov.in/FoodPortal.aspx என்ற வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இங்கிருந்து நீங்கள் அட்டை படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு பெற, நீங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்காளை வழங்கலாம். விண்ணப்பித்த பிறகு, நீங்கள் 5 முதல் 45 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது சரிபார்ப்புக்கு அனுப்பப்படுகிறது. சரிபார்ப்பு 30 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது.