Amazon-னின் Robotaxi: பெட்ரோல விடுங்க, இனி taxi ஓட்ட driver கூட வெண்டாம்
இந்த ரோபோடாக்சியில் ஸ்டியரிங் இல்லை. அதில் நான்கு பேர் எதிர் எதிரே அமர முடியும். இதில் பயணிப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் அமர்வார்கள். இதில் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு தனி இருக்கைகள் இல்லை. (Photo Courtesy: Zoox Official website)
இந்த ரோபோடாக்சி கார் மணிக்கு 75 மைல்கள் வரை பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால், இது 16 மணி நேரம் வரை நீடிக்கும். பாதுகாப்பிற்காக, இந்த காரில் நான்கு இருக்கைகளுக்கு ஏர்பேக்குகளும் உள்ளன. (Photo Courtesy: Zoox Official website)
ரோபோடாக்சியின் நான்கு மூலைகளிலும் கேமராக்கள், ரேடார் மற்றும் லிடார் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன், இந்த கார் சாலையில் 270 டிகிரி கண்காணிக்க முடியும். ((Photo Courtesy: Zoox Official website)
நெவாடாவின் லாஸ் வேகாஸ், கலிபோர்னியாவின் ஃபாஸ்டர் சிட்டி மற்றும் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று நகரங்களில் தற்போது ரோபோடாக்சியை பரிசோதித்து வருவதாக அமேசான் ஜூக்ஸ் கூறுகிறது. (Photo Courtesy: Zoox Official website)
அமேசான் செல்ப் டிரைவிங் ரோபோடாக்சி, ஆல்பாபெட்டின் வேமோ, ஜிஎம்ஸின் குரூஸ், உபெர் மற்றும் டெஸ்லா கார்களை விட பல புதிய மற்றும் சிறப்பம்சம் வாய்ந்த அம்சங்களைப் பெற்றுள்ளது. இதனால் அம்சங்களின் அடிப்படையில் இது மற்ற கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கக்கூடும். (Photo Courtesy: Zoox Official website)