இந்தியாவில் அட்டகாசமாக அறிமுகமாகிறது Samsung Galaxy M42 5G: கசிந்த விலை, பிற விவரங்கள் இதோ

Thu, 22 Apr 2021-2:07 pm,

இந்த தொலைபேசி குறித்து கசிந்த விவரங்களின்படி, இந்த தொலைபேசியை இந்தியாவில் 20,000 ரூபாய் முதல் 25000 ரூபாய்க்குள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும். தொலைபேசி இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கசிந்த தகவல்களின் படி, Samsung Galaxy M42 5G ஸ்மார்ட்போன் 6GB மற்றும் 8GB வகைகளில் அறிமுகமாகக் கூடும். இது சாம்சங்கின் M தொடரின் முதல் 5G ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த சாம்சங் தொலைபேசியின் சப்போர்ட் பேஜ், சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் லைவ் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு இந்த தொலைபேசி இந்த மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படக்கூடும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. 

Samsung Galaxy M42 5G ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, எனினும், இது குறித்த சில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த தொலைபேசியில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசசர் வழங்கப்படக்கூடும். இந்திய சந்தையில், இந்த தொலைபேசியை Knox செக்யூரிட்டி அம்சத்துடன் நிறுவனம் அறிமுகம் செய்யலாம். இந்த அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Samsung Galaxy M42 5G தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் பணிபுரியக்கூடும். இந்த தொலைபேசியில் 128GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர, 64 மெகாபிக்சல் கேமரா தொலைபேசியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6000mAh பேட்டரி இதற்கான பவரை வழங்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link