SBI அளித்த good news: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது வங்கி, முழு விவரம் இதோ!!

Mon, 01 Mar 2021-4:07 pm,

SBI-யின் இந்த சிறப்பு சலுகையில், வட்டி விகிதம் 6.70 ஆக குறைந்துள்ளது. அதே வட்டி விகிதத்தில், 75 லட்சம் வரை கடன்கள் மிக எளிதாக கிடைக்கின்றன. 75 லட்சம் முதல் 2 கோடி வரையிலான கடன்கள் 6.75 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கும். இது தவிர, மார்ச் 31 வரை SBI-யால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் வீடு வாங்குவோரிடமிருந்து செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த சிறப்பு சலுகையில், SBI பல்வேறு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன.

SBI சமீபத்தில் ரியல் எஸ்டேட் குழு ஷாபுர்ஜி பலாஞ்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஊழியர்களும் இந்த சலுகையின் பலனைப் பெறுவார்கள். வீட்டில் இருந்தபடியே இது குறித்த தகவல்களைப் பெற மக்கள் 72089-33140 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று SBI தெரிவித்துள்ளது.

 

சமீபத்தில், SBI வீட்டுக் கடன் துறையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்த சந்தையில் 34 சதவீதத்தை SBI வைத்திருக்கிறது. SBI இதுவரை மொத்தம் 5 லட்சம் கோடி வரை கடனை வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கையை 2024 க்குள் 7 லட்சம் கோடியாக உயர்த்துவதே SBI-யின் இலக்காகும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் சுமார் 2 லட்சம் பேருக்கு 2020 டிசம்பர் வரை SBI வீட்டுக் கடன் வழங்கியுள்ளது.

இந்திய குடிமக்களைத் தவிர, வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கும் (NRI) SBI-யின் இந்த சிறப்பு சலுகையில் வீட்டுக் கடன்கள் கிடைக்கும். வேலையில் உள்ள நபர்களைத் தவிர, சுயதொழில் செய்பவர்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 75 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 750 க்கும் குறைவாக இருக்கக்கூடாது. இது தவிர, மாத வருமானத்தின் நிரந்தர ஆவணங்களையும் விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link