வாடிக்கையாளர்களுக்கு Zero Balance Savings Account-க்கான வசதியை அளிக்கும் Top 5 Banks இவைதான்

Fri, 16 Oct 2020-2:12 pm,

SBI-ல் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கைத் திறக்கலாம். ஆனால், நிறுவனத்தின் கொள்கையின்படி, கணக்கு வைத்திருப்பவர் சரியான KYC ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். இந்த சேமிப்பு வங்கி கணக்கின் நோக்கம் வாடிக்கையாளர்களை எந்த கட்டணமும் இன்றி சேமிக்க ஊக்குவிப்பதாகும். இந்த SBI கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு Rupay Debit Card வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு எந்த வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் ஒரு மாதத்தில் நான்கு முறை பணம் எடுக்கலாம். இந்த கணக்கில் வங்கி வழங்கிய சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் 2.75 சதவீதமாகும். Photo Credits - PTI

Yes Bank-ன் ஸ்மார்ட் சேலரி அட்வாண்டேஜ் அகௌண்ட் என்பது ஒரு பூஜ்ஜிய இருப்பு கணக்கு மட்டுமல்ல. இது இணையம் மற்றும் மொபைல் வங்கி சேவை மூலமாக, NEFT மற்றும் RTGS மூலம் வரம்பற்ற இலவச ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் வழங்குகிறது. அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள், Yes Bank ATM-மிலிருந்து வரம்பற்ற பணத்தை எடுக்க முடியும். அவர்களுக்கு Yes Bank டைடானியம் டெபிட் கார்டுகளையும் அளிக்கின்றது. மேலும் இந்த கணக்கில் வங்கி வழங்கும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் ஆகும். Photo Credits: Reuters

அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு அல்லது BSBDA என்பது குறைந்தபட்ச இருப்பு இல்லாத சேமிப்புக் கணக்காகும். BSBDA வைத்திருப்பவர் கணக்கு திறக்கும் முறையின் கீழ் ATM கம் டெபிட் கார்டைப் பெறுவார். இவர்களுக்கு பாஸ்புக் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கும். மேலும் செயல்படாத கணக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு இருக்கும் அதே வட்டி விகிதம்தான் இதற்கும் இருக்கும். இது 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும். Photo Credits: Reuters

கோட்டக் 811 என்பது அனைவருக்கும் கிடைக்கும் பூஜ்ஜிய இருப்பு டிஜிட்டல் வங்கி கணக்காகும். கோடக் 811 கணக்கு உங்கள் பணத்தை சேமிப்பதோடு, உங்கள் பணத்தை ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த கணக்கு உங்களுக்கு நிதிகளை மாற்ற, பில்கள் செலுத்த மற்றும் இன்னும் பல செயல்களைச் செய்ய அனுமதிக்கிறது. Photo Credits - PTI

IDFC FIRST Bank-ன் முதல் சேமிப்புக் கணக்கு ஒரு பூஜ்ஜிய இருப்பு கணக்காகும். இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ரூ .1 லட்சத்திலிருந்து ரூ. Photo Credits: Reuters

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link