SBI Cheap Loans: பல்வேறு கடன் வகைகளில் SBI அளிக்கும் அதிரடியான சலுகைகள் இதோ!!
SBI தன்னுடைய பல்வேறு கடன் வகைகளில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பல்வேறு ட்வீட்களில், கார் கடன், தங்கக் கடன், தனிநபர் கடன், வணிகக் கடன் ஆகியவற்றின் புதிய வட்டி விகிதத்தை பற்றி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது. Source: Reuters
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செயலாக்க கட்டணம் போன்ற பிற கட்டணங்கள் குறித்தும் தகவல்களை தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கியான SBI, வட்டி வீதத்தில் 0.25 சதவீத சலுகை, பூஜ்ஜிய செயலாக்க கட்டணம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் கடன்களில் யோனோ செயலி மூலம் கார் கடனைப் பெறுவதற்கு 100 சதவீத நிதி உதவி, ஆகிய வசதிகளை அளிக்கிறது. Source: PTI
SBI, 9.60 வீதத்தில் தனிநபர் கடனை வழங்குகிறது. இதை ஆன்லைனில் நான்கு கிளிக்குகளில் பெற முடியும். “திருமணத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளதா? கவலை வேண்டாம். SBI-யின் தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிக்கவும். வெறும் 4 கிளிக்குகளில் 9.60% வட்டி விகிதம் போன்ற அற்புதமான சலுகைகளைப் பெறுவீற்கள்” என்று SBI கூறியுள்ளது. Source: PTI
SBI வணிக கடன் குறித்தும் ட்வீட் செய்துள்ளது. "பிசினஸ் செய்ய பல யோசனைகள் இருந்து முதலீடு செய்ய பணம் இல்லையா? கவலைப்பட வேண்டாம். எஸ்பிஐ-யில் வணிக கடன் பெற விண்ணப்பிக்கவும், 7.50% வட்டி விகிதம், பூஜ்ஜிய செயலாக்கக் கடன் போன்ற பல சலுகைகளைப் பெறலாம்.” என SBI கூறியுள்ளது. Source: PTI
"நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டுமா? செல்ல கார் இல்லையா? கவலைப்பட வேண்டாம். SBI-யில் கார் கடன் பெற விண்ணப்பிக்கவும். 7.50% வட்டி விகிதம், பூஜ்ஜிய செயலாக்கக் கடன் போன்ற பல சலுகைகளைப் பெறலாம்" என்று ட்வீட் செய்த எஸ்பிஐ வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி அறிவித்துள்ளது. Source: PTI