ஏப்ரல் 2021 முதல் உங்கள் take home salary குறையும்: புதிய விதிகளால் பெரிய தாக்கம்
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம். ஏனெனில் இந்த வரைவு விதி நிறுவனங்கள் தங்கள் ஊதிய கட்டமைப்பை மறுசீரமைக்கக் கோரியுள்ளது.
ஊழியர்களின் கொடுப்பனவு கூறு மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் சம்பளத்தின் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளக் கூறுக்கு ஒதுக்க வேண்டும்.
இதன் விளைவாக ஊழியரின் கிராச்சுட்டி மற்றும் பி.எஃப் பங்களிப்பு அதிகரிக்கும். எனவே, ஊழியர்களின் டேக் ஹோம் ஊதியத்தின் அளவு குறைக்கப்படலாம். கிராச்சுட்டி மற்றும் பிஎஃப் கூறுகள் உயரக்கூடும்.
ஒருபுறம், புதிய ஊதிய விதிகள் ஓய்வூதியத்திற்கு பிந்தைய சலுகைகளின் அடிப்படையில் மக்களுக்கு பயனளிக்கும். அதே வேளையில், மாதா மாதம் அவர்களது கணக்கில் வரும் சம்பளத்தை குறைப்பது அவர்களின் தற்போதைய நிதி நிலைமையை பாதிக்கலாம். டேக் ஹோமில் குறைவு ஏற்பட்டால், அதற்கேற்ப வீட்டு செலவுகள், கடன்கள், எஸ்ஐபி போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்.
வழக்கமாக சம்பளம் பெறும் வர்க்க மக்கள் தங்கள் சம்பளத்தில் 40 சதவீதத்தை ஈ.எம்.ஐ.களில் செலவிடுகிறார்கள் - வீட்டுக் கடன், கார் கடன் இ.எம்.ஐ ஆகியவை இதில் அடங்கும். டேக் ஹோம் சம்பளத்தைக் குறைப்பது செலவுகளை நிர்வகிப்பதை கடிமாக்கிவிடும்.
முன்மொழியப்பட்ட புதிய ஊதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், அது மாத சம்பளக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், இது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை இப்போதே புரிந்துகொள்வது நல்லது. இதன்மூலம் நீங்கள் அதகேற்றபடி உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்.