Tamil New year Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 14 ஏப்ரல் 2021 - தமிழ் வருட பிறப்பு
2021 - 2022 க்கான பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். இதனால் இந்த பிலவ வருடத்திலும் பருவம் தவறி மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர். விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.
புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும்.
பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும்.
இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும்