தனது வாடிக்கையாளர்களுக்காக Corona free car-களை special packing மூலம் வழங்குகிறது Tata Motors

Mon, 30 Nov 2020-7:56 pm,

இந்த கோவிட் காலத்தில், நாடு முழுவதும் உள்ள கார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகஸ்தர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல நிறுவனங்களின் டீலர்கள் டிஜிட்டல் முறையில் வாகனங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். சில டீலர்கள் கார்களை சுத்திகரிப்பு செய்து வாடிக்கையாளரின் வீட்டிற்கு கொண்டு செல்கின்றன. வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்களும் இந்த நிறுவனங்களின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

'Safety Bubble’-க்குள் வைத்து வாகனத்தை செலிவரி செய்வதற்கான இந்த புதிய முயற்சியைப் பற்றி Tata motors சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இந்த முயற்சியில், நிறுவனம் வாகனத்தை முழுவதுமாக சுத்திகரித்து, அதை வழங்குவதற்கு முன் 'பாதுகாப்பு குமிழில்' வைக்கிறது.

 

டாடா மோட்டார்ஸ் ட்விட்டரில் படங்களை பகிர்ந்து, “Check out the Safety Bubble - our latest addition to Sanitised by Tata Motors, ensuring your favourite cars and SUVs are shielded from germs while they await you at our dealerships.” என்று எழுதியது. நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது.

நிறுவனம் தனது வெவ்வேறு வாகனங்களுக்கு வெவ்வேறு அளவுகளில் பாதுகாப்பு குமிழிகளைத் தயாரித்துள்ளது. மேலும் இது வெளியிருந்து பார்க்கும் விதத்தில் உள்ள பிளாஸ்டிக் விதானம் போல தயாரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காரை வெளியில் இருந்து நன்றாக பார்க்க முடியும்.

குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா தொற்றுநோயை மனதில் கொண்டு டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வாகனங்களை சுத்திகரிப்பு செய்வதுடன், உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அக்சசரிகளையும் கொடுக்கத் தொடங்கியுள்ளது. வெவ்வேறு வாகனங்களுக்காக இந்த அக்சசரீஸ் வடிவமைக்கப்பட்டன.

காற்று சுத்திகரிப்பு கருவி, காற்று வடிகட்டி மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் போன்றவை வாகனங்களில் அக்சசரிகளாக வழங்கப்படுகின்றன. நிறுவனம் வழங்கும் air purifier, cup holder slot-ல் நன்றாகப் பொருந்துகிறது. Nexon மற்றும் Harrier வாகனங்களில் இவை பொருத்தப்பட்டு வருகின்றன. சேனிடைசேஷன் கிட்டில், ஹேண்ட் சேனிடைசர்கள், N95 முகக்கவசங்கள், கையுறைகள், safety touch key, tissue box, மற்றும் mist diffuser ஆகியவை வழங்கப்படுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link